This Article is From Oct 29, 2019

திருமணம் செய்து கொள்ள மறுத்த ஆண்: ஆசிட் வீசிய பெண் கைது

வீட்டிற்கு அருகில் உள்ள கடையில் அவன் நின்றுகொண்டிருக்கும்போது அவள் ஆசீட் வீசியுள்ளாள்

திருமணம் செய்து கொள்ள மறுத்த ஆண்: ஆசிட் வீசிய பெண் கைது

பெண்ணின் மீது 326 ஏ பிரிவின் கீழ் காவர்ஸி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். (Representational)

Aligarh:

ஆக்ராவுக்கு அருகில் உள்ள அலிகாரில் ஜீவங்கர் பகுதியில் 19 வயதான பெண் அவரது காதலன் மீது ஆசிட் வீசியதால் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். பெண்ணின் மீது 326 ஏ பிரிவின் கீழ் காவர்ஸி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட நபரின் தாயார் கூறும்போது, அந்தப் பெண்ணும் எனது மகனும் காதலித்துவந்தனர். ஒரு மாதத்துக்கு முன்னால் அவளுடன் பேசுவதை நிறுத்திக்கொண்டான். ஆனால் அந்தப் பெண் அவனை திருமணம் செய்துகொள்ளுமாறு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தாள்.

தினமும் போன் மூலம் அவனை துன்புறுத்திவந்தாள். வியாழக் கிழமை காலையிலும் அவளது போனுக்கு அவன் பதிலளிக்கவில்லை. இந்நிலையில் வீட்டிற்கு அருகில் உள்ள கடையில் அவன் நின்றுகொண்டிருக்கும்போது அவள் ஆசீட் வீசியுள்ளாள்” என்று தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட பெண், “அந்தப் பையனை நான் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தினான். இல்லையென்றால் என்னுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவேற்றிவிடுவதாக மிரட்டினான்” என்று கூறியுள்ளார்.

ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவர், ஆசிட் வீச்சினால் அந்த இளைஞரின் கண் மிகவும் பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.