ஒருமித்த கருத்துடைய கட்சிகளை காங்கிரஸ் ஒன்றிணைக்க வேண்டும் - அகிலேஷ் யாதவ் வலியுறுத்தல்

“காங்கிரஸ் கட்சி பலவீனமாக இருந்தபோது, அதற்கு ஆதரவு அளித்தது சமாஜ்வாதிதான் என்பதை அக்கட்சி மறந்து விடக் கூடாது” என்று அகிலேஷ் யாதவ்

 Share
EMAIL
PRINT
COMMENTS
ஒருமித்த கருத்துடைய கட்சிகளை காங்கிரஸ் ஒன்றிணைக்க வேண்டும் - அகிலேஷ் யாதவ் வலியுறுத்தல்

உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் பேட்டியளித்த காட்சி.


Khajuraho: 

பொதுத் தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக பல்வேறு கட்சிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது -

ஒருமித்த கருத்துடைய கட்சிகளை ஒருங்கிணைப்பது என்பது காங்கிரஸ் கட்சியின் பொறுப்பு. முன்பு காங்கிரஸ் கட்சி உத்தரப்பிரதேசத்தில் பலவீனமாக இருந்தபோது, அக்கட்சிக்கு சமாஜ்வாதி உதவிசெய்தது. இதனை காங்கிரஸ் நினைத்துப் பார்க்க வேண்டும். மத்திய பிரதேசத்தில் பாஜகவை வீழ்த்தும் சக்தி காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே உண்டு. அங்கு கடந்த 2003-ல் இருந்து பாஜக ஆட்சி செய்து வருகிறது.

மத்திய பிரதேசத்தில் விவசாயிகளுக்கு எதிராக ஆளும் பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. அவர்களை தோற்கடிக்க காங்கிரசால் மட்டும்தான் முடியும். எனவே அக்கட்சியின் வெற்றிக்கு உதவும் வகையில் நாங்கள் வேட்பாளர்கள் யாரையும் நிறுத்தவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................