மாயாவதியுடன் எதிர்காலத்தில் கூட்டணி இருக்குமா என்பது குறித்து அகிலேஷ் ஏதும் அறிவிக்கவில்லை.
Lucknow: உத்தரப்பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகுமாறு சமாஜ்வாதி கட்சி தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் சமாஜ்வாதி கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி வைத்தது. மொத்தம் 80 தொகுதிகளைக் கொண்ட இடங்கு இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து பெருவாரியான இடங்களை கைப்பற்றினால், மத்தியில் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கலாம் என்ற எண்ணத்தில் மாயாவதியும், அகிலேஷ் யாதவும் இருந்தனர்.
ஆனால் எதிர்பார்ப்புகளை படுகுழியில் தள்ளி பாஜக இங்கு மொத்தம் உள்ள 80 இடங்களில் 60 இடங்களை கைப்பற்றியது. இதற்கு அடுத்தபடியாக மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 10 இடங்கள் கிடைத்தன. முன்பு ஆளும் கட்சியாக இருந்த அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிக்கு 5 இடங்கள் மட்டுமே கிடைத்திருக்கிறது.
இதையடுத்து வியூகத்தை மாற்றியுள்ள அகிலேஷ் யாதவ், அடுத்ததாக எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை குறிவைத்துள்ளார். 2022-ல் நடைபெறவிருக்கும் அந்த தேர்தலுக்காக இப்போதே தயாராகும்படி கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு அவர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.