This Article is From Oct 30, 2018

பணிமாறுதலுக்கு எதிராக சிபிஐ அதிகாரி வழக்கு: அஸ்தானாவுக்கு நெருக்கடி!

ராவ், வழங்கிய அனைத்துப் பணி ஆணைகள் குறித்தும் உச்ச நீதிமன்றம், அரசிடம் அறிக்கை கேட்டுள்ளது

பணிமாறுதலுக்கு எதிராக சிபிஐ அதிகாரி வழக்கு: அஸ்தானாவுக்கு நெருக்கடி!

சிபிஐ அதிகாரி ஏ.கே.பஸ்ஸி, கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ள சிபிஐ-யின் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிரான வழக்கை விசாரித்து வருகிறார்

New Delhi:

சிபிஐ அதிகாரி ஏ.கே.பஸ்ஸி, கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ள சிபிஐ-யின் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிரான வழக்கை விசாரித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு, போர்ட் ப்ளேயருக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டது. இதற்கு எதிராக அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

நீதிமன்றத்தில் பஸ்ஸி தாக்கல் செய்துள்ள மனுவில், ‘தொழிலதிபர் சதீஷ் சனாவிடமிருந்து, ராகேஷ் அஸ்தானா லஞ்சம் வாங்கியதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது. எனவே, அஸ்தானாவுக்கு எதிராக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார். 

சிபிஐ-யின் இடைக்கால இயக்குநராக செயல்பட்டு வரும் நகேஷ்வர ராவ், கடந்த 24 ஆம் தேதி, பஸ்ஸியை போர்ட் ப்ளேயருக்கு, ‘பொது நலன்' கருதி பணி மாறுதல் செய்து ஆணை வழங்கினார். பஸ்ஸி மட்டுமல்லாமல், சிபிஐ அமைப்பைச் சேர்ந்த பல அதிகாரிகள் 24 ஆம் தேதி அதிரடியாக பணி மாற்றம் செய்யப்பட்டனர். 

ராவ், வழங்கிய அனைத்துப் பணி ஆணைகள் குறித்தும் உச்ச நீதிமன்றம், அரசிடம் அறிக்கை கேட்டுள்ளது. அது குறித்து ஆராயப்படும் என்று தெரிகிறது. மேலும் நீதிமன்றம், ‘சிபிஐ இயக்குநராக இருக்கும் ராவ், எந்த பாலிசி முடிவுகளிலும் ஈடுபடக் கூடாது. அவர் தலைமை பொறுப்பாளராக மட்டுமே செயல்பட முடியும்' என்று உத்தரவிட்டுள்ளது.

.