அஜித்துக்கு வாழ்த்து சொன்ன ஐஷ்வர்யா!!!

இந்த வெற்றி அவருக்கு கிடைக்க வேண்டிய வெற்றிதான். "கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்" படத்தில் இருவரும் நடித்திருந்தோம்

அஜித்துக்கு  வாழ்த்து சொன்ன ஐஷ்வர்யா!!!

சென்னை வந்திருந்த ஐஸ்வர்யா நடிகர் அஜித்தை புகழ்ந்து  பேசிதோடு வாழ்த்தும் தெரிவித்திருக்கிறார். 

சமீபத்தில் சென்னையில் உள்ள பிரபல கடைதிறப்பு  விழாவில் கலந்துக்கொண்ட ஐஸ்வர்யா, தல அஜித்துடன் "கண்டுகொண்டேன்  கண்டுகொண்டேன்" படத்தில் இணைந்து பணியாற்றியது குறித்த நினைவுகளை நினைவு கூர்ந்திருந்தார். அவர் குறிப்பிட்டதாவது. "அஜித் உன்மையாகவே சிறந்த மற்றும் நேர்மையான மனிதர். அதனால்தான் தொடர்ந்து வெற்றிகளை பெற்று வருகிறார். அவரை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள் இதை பார்க்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வெற்றி அவருக்கு கிடைக்க வேண்டிய வெற்றிதான். "கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்" படத்தில் இருவரும் நடித்திருந்தோம். நாங்கள் இருவரும் காட்சிகள் மிகக்குறைவுதான். ஆனால் அவரடைய குடும்பத்தை அப்போது சந்தித்தது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அவருடை எல்லா வெற்றிக்கு என் வாழ்த்துகள். என்று தெரிவித்திருந்தார். மேலும் பேசிய அவர் மணிரத்னம் படத்தில் நடிப்பது பெருமையாக இருப்பதாக தெரிவித்திருந்தார். 
 

ஹைலைட்ஸ்

  • கடந்த 2000ம் ஆண்டு வெளியான படம் "கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்"
  • ராஜுவ் மேனன் இப்படத்தை இயக்கி இருந்தார்
  • ஐஸ்வர்யா இந்த படத்தில் அஜித்துடன் நடித்திருந்தார்
More News