லக்கேஜ் வைக்கும் இடத்தில் விமான பணிப்பெண் : வைரல் வீடியோ

பயணி லாயிட் “இது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. பயணிகளை சிரிக்க வைப்பதற்கு உதவியாளர் பெண் செய்திருப்பார்” என்று தெரிவித்தார்

லக்கேஜ் வைக்கும் இடத்தில் விமான பணிப்பெண் : வைரல் வீடியோ

நாஷ்வில்லிருந்து பிலடெல்பியாவுக்கு தென்மேற்கு ஏர்லைன்ஸ் (Southwest Airlines ) விமானம் மூலம் பயணித்த பயணி எடுத்த வீடியோவில் விமானத்தில் அமரும் சீட்டிற்கு மேல் கையில் வைத்திருக்கும் லக்கேஜை வைப்பதற்கான இடத்தில் விமான உதவியாளர் ஒருவர் இருப்பதை வீடியோ எடுத்துள்ளார். 

பயணி வெரோனிகா லாயிட் எடுத்த வீடியோவில் விமான உதவியாளர் பெண் ஒருவர் ஹேண்ட் லக்கேஜ்களை வைக்கும் இடத்தில் இருந்து வெளிப்படுவதை பார்க்கலாம். 

பயணி லாயிட் ஃபாக்ஸ் நியூஸிடம் பேசிய போது, “அந்த பெண் அந்த இடத்தில் 10 நிமிடங்களுக்கு மேல் இருந்தார்” என்றும் கீழே இறங்கியும் மற்ற பயணிகளிடம் வெகு சகஜமாக பேசினார் என்றும் தெரிவித்தார். அங்கு இருப்பதை பார்த்து முதலில் குழப்பமடைந்ததாகவும் தெரிவித்தார். 

பயணி லாயிட் “இது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. பயணிகளை சிரிக்க வைப்பதற்கு உதவியாளர் பெண் செய்திருப்பார்” என்று தெரிவித்தார்

Click for more trending news