ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை மார்ச் மாதத்தில் விற்க முடிவு : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

நிதிநிலையில் கடும் அழுத்ததை எதிர்கொண்டுள்ள இரு நிறுவனங்களுக்கும் ரூ.58,000 கோடி கடன் உள்ளது.

ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை மார்ச் மாதத்தில் விற்க முடிவு : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

ஏர் இந்தியாவை பொறுத்தவரை முதலீட்டாளர்களிடையே “அதிக ஆர்வம்” இருப்பதாக தெரிவித்தார்.

New Delhi:

ஏர் இந்தியா மற்றும் பாரத் பெட்ரோலியம் இரண்டும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அரசாங்கத்தால் விற்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். நிதிநிலையில் கடும் அழுத்ததை எதிர்கொண்டுள்ள இரு நிறுவனங்களுக்கும் ரூ.58,000 கோடி கடன் உள்ளது. 

இந்த ஆண்டு அவற்றை கடக்க முடியும் என்று எதிர்பார்க்கிறோம். உண்மையான நெருக்கடிகள் வெளிவரும் என்று தினசரி பத்திரிக்கையிடம் கூறியுள்ளார். 

இந்த மாத தொடக்கத்தில் ஏர் இந்தியா தலைவர் அஸ்வானி லோகானி ஏர் இந்தியா ஊழியர்களுக்கு எழுதிய கடிதத்தில் பங்குகளை விற்கும் முயற்சி நிறுவனத்தில் நிலைத்தனமையை செயல்படுத்தக்கூடும் என்று கூறியிருந்தார். 

ஏர் இந்தியாவை பொறுத்தவரை முதலீட்டாளர்களிடையே “அதிக ஆர்வம்” இருப்பதாக தெரிவித்தார்.

அண்மையில் முதலீடு செய்வதற்கான செயல்பாட்டில் மாற்றங்களை அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. தற்போது ஏர் இந்தியாவின் 100 சதவீத பங்குகளை அரசாங்கம் கொண்டுள்ளது. 

ஏர் இந்தியா சுமார் கடந்த நிதியாண்டில் ரூ. 4,600கோடி எரிபொருள் விலை  அந்நிய செலவாணி இழப்பு கொண்டிருந்தன. 

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் 53.29 சதவீத பங்குகளை விற்பனைக்கு ஒப்புகொண்டுள்ளனர். 

More News