டேக்-ஆஃப்க்கு தயாரான ஏர் இந்தியா விமானம்… தவறி விழுந்த 53 வயது விமானப் பணிப்பெண்!

மும்பையிலிருந்து டெல்லிக்குக் கிளம்ப தயாரான ஏர் இந்தியா விமானத்திலிருந்து, அந்த விமானத்தின் 53 வயது பணிப் பெண் கீழே விழுந்துள்ளார்

டேக்-ஆஃப்க்கு தயாரான ஏர் இந்தியா விமானம்… தவறி விழுந்த 53 வயது விமானப் பணிப்பெண்!

இந்த சம்பவம் குறித்து ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளரை உடனடியாக தொடர்பு கொள்ள முடியவில்லை. (கோப்புப் படம்)

Mumbai:

மும்பையிலிருந்து டெல்லிக்குக் கிளம்ப தயாரான ஏர் இந்தியா விமானத்திலிருந்து, அந்த விமானத்தின் 53 வயது பணிப் பெண் கீழே விழுந்துள்ளார்.

அவருக்குக் காலில் காயம் ஏற்பட்டதை அடுத்து, அருகிலிருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இது குறித்து ஏர் இந்தியா விமானம் வெளியிட்ட அறிக்கையில், ‘மும்பையின் சந்திரபதி சிவாஜி விமான நிலையத்தில் இன்று காலை ஏர் இந்தியா ஏஐ 864 விமானத்தில் தான், ஹர்ஷா லோபோ என்கின்ற எங்கள் குழு பணிப் பெண் கீழே விழுந்துள்ளார். 

Newsbeep

விமானத்தின் கதவை அடைக்கும் போது, லோபோ தடுமாறி கீழே விழுந்துள்ளார். அவருக்குக் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து லோபோ, நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளது.