ஏஎன் 32 விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழப்பு: இந்திய விமானப்படை தகவல்

ஏஎன் 32 விமானத்தில் பயணித்த 13 பேரும் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. இது குறித்து ஏற்கெனவே பயணித்தவர்களின் குடும்பத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய விமானப்படை கூறியுள்ளது. 

மதியம் 1 மணியளவில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.

New Delhi:

ஏஎன் -32 ரக விமானத்தில் பயணித்த 13 பேரும் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்திய விமானப்படையின் ஏஎன் 32 விமானம் ஜுன் 3 ஆம் தேதி மதியம் 12.25 மணிக்கு அசாம் மாநிலம் ஜோர்கட்டிலிருந்து அருணாச்சல பிரதேசத்தின் மேசூகா பகுதிக்கு புறப்பட்டது. மதியம் 1 மணியளவில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இந்த விமானத்தில் 13 பேர் பயணம் செய்திருந்தனர். இதனை தொடர்ந்து இந்திய விமானப்படை,இந்திய ராணுவம் உள்ளிட்டவைகள் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். ஒருவார கால தேடுதலுக்குப் பிறகு அந்த விமானத்தின் பாகங்கள் அருணாசல பிரதேசத்தின் லிப்போ பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில்  ஏஎன் 32 விமானத்தில் பயணித்த 13 பேரும் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. இது குறித்து ஏற்கெனவே பயணித்தவர்களின் குடும்பத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய விமானப்படை கூறியுள்ளது.