அதிமுக தலைமையிலான கூட்டணி போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் வெளியீடு! - முழு விவரம்!

அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
அதிமுக தலைமையிலான கூட்டணி போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் வெளியீடு! - முழு விவரம்!

நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்த தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில், பாமகவுக்கு 7 நாடாளுமன்ற தொகுதிகளும், பாஜகவுக்கு 5 தொகுதிகளும், தேமுதிகவுக்கு 4 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதேபோல், புதிய தமிழகம் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக் கட்சி, என்.ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

அதிமுக கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்குவது குறித்த பேச்சுவார்த்தை, அனைத்து கட்சிகளுடனும் சுமூகமாக முடிவுற்ற நிலையில், எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் என்பதை அதிமுக தலைமை அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது.

அதன்படி அதிமுக போட்டியிடும் தொகுதிகள் விவரம்,

1. சேலம்

2. நாமக்கல்

3. கிருஷண்கிரி

4. ஈரோடு

5. கரூர்

6. திருப்பூர்

7. பொள்ளாச்சி

8. ஆரணி

9. திருவண்ணாமலை

10. சிதம்பரம்

11. பெரம்பலூர்

12. தேனி

13. மதுரை

14. நீலகிரி

15. திருநெல்வேலி

16. நாகை

17. மைலாடுதுறை

18. திருவள்ளூர்

19. காஞ்சீபுரம்

20. சென்னை தெற்கு

பாமக போட்டியிடும் தொகுதிகள்,

1. தர்மபுரி

2. விழுப்புரம்

3. அரக்கோணம்

4. கடலூர்

5. மத்திய சென்னை

6. திண்டுக்கல்

7. ஸ்ரீபெரும்புதூர்

பா.ஜ.க போட்டியிடும் தொகுதிகள்,

1. கன்னியாகுமரி

2. சிவகங்கை

3. கோவை

4. ராமநாதபுரம்

5. தூத்துக்குடி

தேமுதிக போட்டியிடும் தொகுதிகள்,

1. கள்ளக்குறிச்சி

2. திருச்சி

3. சென்னை வடக்கு

4. விருதுநகர்

என்ஆர் காங்கிரஸ் புதுச்சேரியிலும், தமாக தஞ்சாவூரிலும், புதியநீதிக்கட்சி வேலூரிலும், புதியதமிழகம் தென்காசியிலும் போட்டியிடுகின்றன.



சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................