'வாக்காளர்களுக்கு அளிக்க ரூ. 100 கோடி பணத்தை திமுக விநியோகித்துள்ளது' : ஜெயக்குமார்

தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளுக்கு ஏப்ரல் 18-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மே 23-ல் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

 Share
EMAIL
PRINT
COMMENTS
'வாக்காளர்களுக்கு அளிக்க ரூ. 100 கோடி பணத்தை திமுக விநியோகித்துள்ளது' : ஜெயக்குமார்

20 தொகுதிகளில் பணம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் புகார் கூறியுள்ளார்.


Chennai: 

வாக்காளர்களுக்கு அளிக்க ரூ. 100 பணத்தை திமுக விநியோகித்துள்ளதாக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். 

திமுக பொருளாளர் துரை முருகனின் வீடு மற்றம் அவருக்கு சொநதமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். 

இதனை குறிப்பிட்டு பேட்டியளித்த ஜெயக்குமார், 'நான் 2 நாட்களுக்கு முன்பு என்ன கூறினேனோ அது இப்போது நடந்து விட்டது. திமுக மொத்தம் 20 தொகுதிகளில் வாக்காளர்களுக்கு வழங்க ரூ. 100 கோடி அளவுக்கு ஒதுக்கியுள்ளது. இவற்றைப் பற்றி கேட்டால் திமுக தலைவர் ஸ்டாலின் டிஷ்ஷு பேப்பர் என்று அதில் அளிப்பார்.

அனைத்து தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்கள் எவ்வளவு பணத்தை விநியோகம் செய்தனர் என்பதுபற்றி தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும். ' என்று கூறினார்.

வேலூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளராக கட்சியின் பொருளாளர் துரை முருகனின் மகன் கதிர் ஆனந்த் நிறுத்தப்பட்டுள்ளார். அதிமுக தரப்பில் கூட்டணிக் கட்சியான புதிய நீதி கட்சியின் ஏ.சி. சண்முகம் களம் இறக்கப்பட்டுள்ளார். 

தமிழகம் மற்றும் புதுவையில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் ஏப்ரல் 18-ம்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. முடிவுகள் மே 23-ம்தேதி அறிவிக்கப்படுகின்றன. சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................