சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க காருக்கு மாட்டுச்சாணம் பூசிய பெண்!

’மாட்டுச் சாணத்தை சிறந்த முறையில் பயன்படுத்தி இங்கு தான் பார்கிறேன்’ என்று முகநூல் பயனாளர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.

சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க காருக்கு மாட்டுச்சாணம் பூசிய பெண்!

மாட்டுச் சாணம் பூசிய கார் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அகமதாபாத்தில் வெயில் 45 டிகிரி செல்சியஸ் வாட்டி வதைத்து வரும் நிலையில், அந்த பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் குளிர்ச்சியாக பயணம் செய்ய புதிய யுத்தி ஒன்றை கண்டறிந்துள்ளார். 

இதுகுறித்து முகநூல் பதிவு ஒன்று வைரலாக பரவி வருகிறது. அந்த பதிவில், கார் ஒன்று மாட்டுச் சாணத்தால் பூசப்பட்ட புகைப்படம் இருக்கிறது. ஆச்சர்யமாக உள்ளதா? ஆர்வமாக உள்ளதா? என்று ரூபேஷ் கவுரங்கா தாஸ் என்பவர் இந்த பதிவை பதிவிட்டுள்ளார். 

இந்த கார் ஒரு பெண்ணுடையது என்றும் அவர் அந்த நகரத்தில் அடிக்கும் வெயிலை சமாளிக்க இவ்வாறு மாட்டுச்சாணத்தை பூசியுள்ளளார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த காரின் உரிமையாளர் செஜல் ஷா என்ற பெண் என்று தெரிவித்துள்ள ரூபேஷ், மாட்டுச் சாணத்தை இது போன்று யாரும் சிறந்த முறையில் பயன்படுத்தி பார்த்ததில்லை' என்று குறிப்பிட்டு இந்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். தொடர்ந்து, காரின் உரிமையாளரை பலர் கிண்டல் செய்தும், சிலர் பாராட்டியும் அந்த புகைப்படங்களை வைரலாக்கி வருகின்றனர். 

கோடைக்காலத்தில் வெயிலை சமாளிப்பதற்கு வீட்டுச் சுவர்களில் சாணம் பூசுவது என்பது இந்தியாவில் சராசரியாக  பின்பறப்பட்டு வருவதாகும். மேலும், இவ்வாறு மாட்டுச்சாணத்தை பயன்படுத்துவது என்பது கோடைக்காலத்தில் குளிர்ச்சியாக வைத்திருக்கும் என்றும் குளிர்காலத்தில் கதகதப்பாக வைத்திருக்கும் என்று நம்பப்பட்டு வருகிறது. 

Newsbeep

Click for more trending news