This Article is From Jun 13, 2018

நாயின் மேலேயே தார் ஊற்றி சாலை… ஆக்ராவில் நடந்த கொடூரம்!

உத்தர பிரதேசத்தின் ஆக்ராவில் நாய் ஒன்றின் மேலேயே தார் ஊற்றி சாலை போட்ட சம்பவம் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது

நாயின் மேலேயே தார் ஊற்றி சாலை… ஆக்ராவில் நடந்த கொடூரம்!

சாலைக்கு அடியில் இறந்த நிலையில் இருக்கும் நாய்

ஹைலைட்ஸ்

  • ஆக்ராவின் ஃபேட்ஹபாத் பகுதியில் நேற்றிரவு சாலை போடப்பட்டது
  • நாய் இறந்ததை அடுத்து, செயற்பாட்டாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்
  • நாய், சாலை போடும்போது உயிருடன் தான் இருந்ததா என்பது தெரியவில்லை
Agra:

உத்தர பிரதேசத்தின் ஆக்ராவில் நாய் ஒன்றின் மேலேயே தார் ஊற்றி சாலை போட்ட சம்பவம் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

ஆக்ராவின் ஃபேட்ஹபாத் பகுதியில் நேற்று இரவு பொதுப் பணித்துறையின் ஒப்பந்ததாரர் கீழ் சாலை போடப்பட்டது. சாலை போடும் போது, ஒரு நாயின் மேலேயே தார் ஊற்றி வேலை நடந்துள்ளது. இது குறித்து ஒரு தரப்பினர், 'சாலை போடும் போது, நாயின் மீது தார் போடப்பட்டது. அப்போது அந்த நாய் வலி தாங்க முடியாமல் கதறியது. இருந்தும் அதை கண்டுகொள்ளாமல் ஊழியர்கள் தொடர்ந்து சாலை போட்ட வண்ணம் இருந்தனர்' என்று கூறப்படுகிறது. 'இரவு என்பதால் வேலை செய்த ஊழியர்களுக்கு நாய் சிக்கிக் கொண்டது தெரியவில்லை. இதனால் தான் அவர்கள் தொடர்ந்து சாலை போட்டுக் கொண்டே சென்றனர்' என்றும் கூறப்படுகிறது. இதில் எது உண்மையென்று தெரியவில்லை என்றாலும், ஒரு இறந்த நாயின் உடல் மீது தான் சாலை போடப்பட்டிருந்தது. 

dog agra

இது குறித்து அப்பகுதியில் இருக்கும் கோவிந்த் பாரஷர் என்ற செயல்பாட்டாளர், 'நாயின் கால் மட்டும் சாலை போடப்படும் தாரில் சிக்கியது. அப்போது அது வலி தாங்க முடியாமல் குரைத்தது. அதை வெளியே எடுக்க முயற்சிக்காததால் சிறிது நேரத்திலேயே அது இறந்துவிட்டது. நாயின் நிலைமை மிகவும் பரிதாபமாக இருந்த காரணத்தால், அதை வெளியில் எடுத்து புதைத்தோம். சாலை போடும் ஊழியர்களுக்கும் பாடம் கற்பிக்க வேண்டும் என்று நினைத்தேன். எனவே, அவர்கள் வேலை செய்யும் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளோம்' என்று தெரிவித்தார். 

பொது மக்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் பலர் சம்பவ இடத்தில் கூடி, சாலை போடும் நிறுவனத்தின் வண்டியை சிறை பிடித்தனர். 
 

.