ஃபேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பில் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்

விசாரணையில் இறந்த நபர் வேலையில்லாமல் மனச்சோர்வடைந்துள்ளார் என்பதைக்கண்டு பிடித்துள்ளோம்

 Share
EMAIL
PRINT
COMMENTS
ஃபேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பில் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்

அதிர்ச்சியூட்டும் தகவல் என்னவென்றால் சில ஃபேஸ்புக் நண்பர்கள் தற்கொலையை நேரலையாக பார்த்துள்ளனர். (Representational)


Agra: 

ஆக்ராவில் உள்ள ராய்பா கிராமத்தில் உள்ள கோயிலுக்கு  சொந்தமான இடத்தில் 22 வயது இளைஞர் ஃபேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பில் தற்கொலை செய்து கொண்டார். தான் காதலித்த பெண்ணுக்கு மற்றொரு ஆணுடன் நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதால், காதல் தோல்வி தாங்கிக்கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

தன்னுடைய முடிவுக்கு குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார். தனது உறுப்புகளைதானம் செய்யும்படி கூறியுள்ளார். அதிர்ச்சியூட்டும் தகவல் என்னவென்றால் சில ஃபேஸ்புக் நண்பர்கள் தற்கொலையை நேரலையாக பார்த்துள்ளனர். 

காவல்துறையினர் கொடுத்த தகவலின் படி, இந்த சம்பவம் சனிக்கிழமை நடந்தது மற்றும் பாதிக்கப்பட்டவர் ஷியாம் சிகர்வார் என அடையாளம் காணப்பட்டார். கோவில் வளாகத்திற்குள் உள்ளூர்வாசிகள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

நான்கு நிமிட வீடியோவில் சிகர்வார் காவல்துறை அதிகாரிகள் யாருக்கு எதிராகவும் எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். தான் இறந்த புகைப்படத்தை தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

“நான் அவளை இழந்து விட்டேன். அவள் இல்லாமல் வாழ முடியாது. அவள் வேறொருவரை திருமணம் செய்து கொள்கிறாள் என்ற உண்மையை என்னால் தாங்க முடியாது. அவளை இழந்த பின் அழுத்தம் என்னை மிகவும் பாதித்தத நான் என் வேலையை இழந்து விட்டேன்”என்று தற்கொலைக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

“தற்கொலை செய்து கொண்ட நபரை  கோயில் வளாகத்திற்கு குடியிருப்பவர்கள் கண்டுபிடித்தனர். விசாரணையில் இறந்த நபர் வேலையில்லாமல் மனச்சோர்வடைந்துள்ளார் என்பதைக்கண்டு பிடித்துள்ளோம்.  பிரேத பரிசோதனை நடந்து முடிந்து பின் உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளோம்.” என்று காவல்துறை அதிகாரி தெரிவித்தார். 

தற்கொலை செய்து கொண்ட நபர் தன்னுடைய குடும்ப நபர்களை பேஸ்புக்கில் பிளாக் செய்துள்ளார்.(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)


சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................