டார்கெட் 2019... மோடியின் புதிய திட்டத்தால் 50 கோடி இந்தியர்கள் பயனடைவரா..?

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் முடிந்துவிட்டன

டார்கெட் 2019... மோடியின் புதிய திட்டத்தால் 50 கோடி இந்தியர்கள் பயனடைவரா..?

2019 தேர்தலுக்கு முன்னர் ஒரு பெரிய திட்டத்தை மோடி தலைமையிலான அரசு அமல்படுத்தும் எனக் கூறப்படுகிறது

ஹைலைட்ஸ்

  • மோடி தலைமையிலான அரசு ஆட்சி ஏற்று 4 ஆண்டுகள் முடிந்துவிட்டன
  • அடுத்த ஆண்டு மக்களவைத தேர்தல் நடக்க உள்ளது
  • சமீபத்தில் நடந்த கர்நாடகா தேர்தலில் பாஜக தோல்வியடைந்தது
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் முடிந்துவிட்டன. இன்னும் ஒரே ஆண்டில் அடுத்த மக்களவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், மோடி தன் கையில் இருக்கும் அனைத்து அஸ்திரங்களையும் பயன்படுத்தத் தயங்க மாட்டார். குறிப்பாக, கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் சில நாட்களுக்கு முன்னர் நடந்த 10 மக்களவை இடைத்தேர்தல்களுக்குப் பின்னர் மோடி-அமித்ஷா கூட்டணி வீழ்த்தக்கூடியவை தான் என்ற எண்ணம் எதிர்க்கட்சிகள் மத்தியில் பிரபலமாகியுள்ளது.

எனவே, சரிந்து வரும் தன் புகழ்ச்சியைத் தக்கவைத்துக் கொள்ள ஒரு புதிய திட்டத்தை மோடி அறிமுகப்படுத்த உள்ளதாக, அரசு தரப்பில் மிக நெருக்கமான வட்டாரத்தில் இருந்து தகவல் வந்துள்ளது. அதாவது, நாட்டில் இருக்கும் 50 கோடி பேருக்கு ஓய்வூதியம், வாழ்க்கை காப்பீடு மற்றும் கர்ப்பகாலத்துக்கான நிதி ஆகியவற்றை கொடுக்கும் வகையிலான திட்டத்தை மோடி சீக்கிரமே அமல்படுத்துவார் என்று கூறப்படுகிறது.
 
bloomberg underperformer graph

குறிப்பாக, வேலை செய்யும் அடித்தட்டு மக்களுக்கு இந்தத் திட்டத்தின் பயனாளர்களாக இருப்பர் என்று கூறப்படுகிறது. அமைப்புசாராத தொழில்லாளர்களுக்கு இந்தத் திட்டத்தின் பயன் பெரிதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அவர்கள் தான் நாட்டின் ஜிடிபி-யில் 50 சதவிகிதத்துக்கு காரணமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் அவர்களுக்குத் தான் அரசு சார்பிலும், அவர்கள் வேலை செய்யும் நிறுவனங்கள் சார்பிலும் எந்த வித பாதுகாப்புகளும் கிடையாது. இதைப் போக்கும் விதத்தில் தான் ஒரு திட்டத்தை தயார்படுத்திக் கொண்டிருக்கிறதாம் மோடி தலைமையிலான அரசு.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம், மோடிகேர் என்ற பெயரில் ஒரு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் ஏறக்குறைய 10 கோடி பேருக்கு சுகாதார காப்பீடு அளிக்கப்படும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், 50 கோடி பேர் பயன் பெறும் வகையில் அடுத்தத் திட்டமும் அமல்படுத்தப்பட உள்ளதாம்.

 
status quo bloomberg graph

ஆனால், இந்தத் திட்டத்தில் ஒரு ஓட்டை இருக்கிறது. அது தான் நேரம். ஆமாம், இன்னும் ஒரே ஆண்டில் மக்களவைத் தேர்தல் வரப் போகிறது. அதற்கு முன்னரே இந்தத் திட்டத்தை அமல்படுத்த முடியாது என்பது தான் பெரும்பாலான பொருளாதார வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது. அப்படி திட்டம் அமல்படுத்தப்பட்டாலும், அது முழுமையானதாக இருக்காது என்றும் கூறப்படுகிறது. ஆனால், தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மோடி, திட்டத்தை அமல்படுத்த வாய்ப்புள்ளதாக உள் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. 

workers generic

உலக அளவில் வறுமையில் இருப்பவர்களில் மூன்றில் ஒருவர் இந்தியாவில் தான் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட நாட்டில் வசிக்கும் மக்களுக்கு, சமூக பாதுகாப்பு நிறைந்த திட்டங்களும், பொது காப்பீடுகளும் அவசியம் தான். ஆனால், ஒரே வருடத்தில் அதை அமல்படுத்த முடியாது என்பது தான் நிதர்சனமாக இருந்து வருகிறது.