கேரள வெள்ளம்: எலிக்காய்ச்சலுக்கு, 12 பேர் உயிரிழப்பு

எலிக்காய்ச்சல் என்பது எலியின் சிறுநீரில் இருந்து வெளியாகும் நுண்ணுயிர்களால் பரவக் கூடியது

 Share
EMAIL
PRINT
COMMENTS

கடந்த ஆகஸ்டு மாதம் பெய்த கனமழையால், கேரளாவில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து, வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து தற்போது நீர் வடியத் தொடங்கியுள்ள நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் எலிக்காய்ச்சல் பரவி வருகிறது

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஆகஸ்டு வரை, கேரளாவில் எலிக்காய்ச்சல் பாதிப்பினால் 28 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, ஆகஸ்டு மாதம் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு பிறகு 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

எலிக்காய்ச்சல் என்பது எலியின் சிறுநீரில் இருந்து வெளியாகும் நுண்ணுயிர்களால் பரவக் கூடியது. எலிக்காய்ச்சல் தொற்று என்பது எல்லாரையும் தாக்கக் கூடியது அல்ல. ஆனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் மற்றும் நோய் தாக்கம் உள்ளவர்களை இது எளிதாக தாக்கும். இதன் காரணமாகவே உயிரிழப்பு ஏற்படுகிறது. மற்ற நாட்களை விட மழைக்காலங்களில் தான் எலிக்காய்ச்சலின் பாதிப்புகள் அதிகம் இருக்கும். காரணம் மறைவிடங்களில் வாழும் எலிகள் வெளியிடும் கழிவுகள் தண்ணீருடன் கலந்து விடுவது மழைக்காலத்தில் தான்.

எலிக்காய்ச்சல் நோய் ஏற்படுவதற்கு, தலைவலி, தசை வலி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் ஏற்படும். சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளவில்லை என்றால், சிறுநீரக பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு ஆகியவை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. நோய்க்கான அறிகுறி தெரிய தொடங்கிய உடனே உரிய சிகிச்சை முறைகளை மேற்கொள்வது அவசியம்

இது குறித்து பேசிய கேரள மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா, மருத்துவமனைகளில் போதுமான அளவு மருந்துகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், நோய் வருமுன் காக்கும் நோய் எதிர்ப்பு மருந்துகள் மக்களுக்கு வழங்கப்படுள்ளதாகவும் தெரிவித்தார். குறிப்பாக, எலிக்காய்ச்சல் பரவாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன



சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................