சிகரெட் துண்டால் விபரீதம்: பெங்களூருவில் விமான கண்காட்சி அருகே பற்றியெறிந்த 300 கார்கள்

காய்ந்த புல் இருந்ததாலும், பலமான காற்று வீசியதாலும் தீ மளமளவென பரவி கார்களை எரித்துள்ளது.

கரும்பு கிளம்பியதால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு காணப்பட்டது.

New Delhi:

பெங்களூருவில் சிகரெட் துண்டால் ஏற்பட்ட தீ விபத்தில் 300-க்கும் அதிகமான கார்கள் எரிந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வடக்கு பெங்களூருவின் ஏலகங்கா பகுதியில் விமான கண்காட்சி கடந்த புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளை வரைக்கும் இந்த கண்காட்சி நீடிக்கிறது.

இதனை பார்க்க வந்தவர்கள் கார்களை அருகே உள்ள புல்வெளியில் நிறுத்தியுள்ளனர். இந்த நிலையில், இன்று மதியம் கார்கள் மள மளவென பற்ற எரியத் தொடங்கின. முதலில் சுமார் 20-30 கார்கள் மற்றும் டூவீலர்களில் மட்டுமே தீ ஏற்பட்டது. இதன்பின்னர் மீண்டும் பரவி சுமார் 100-க்கும் அதிகமான கார்கள் மற்றும் டூ வீலர்களை தீ எரித்து விட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். காய்ந்த புல் தரையில் சிகரெட் துண்டு விழுந்ததால் இந்த சம்பவம் நேர்ந்திருக்கலாம் என தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர். பலமான காற்று வீசியதால் தீ கார்களுக்கு பரவி அதிக கார்களை எரித்துள்ளது.

இதனால் பெரும் அளவில் கரும்புகை காணப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து விமான கண்காட்சி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

 

மேலும் படிக்க - “ஷாப்பிங் மாலில் சுற்றித்திரிந்த சிறுத்தையால் பதற்றம்"