This Article is From Nov 13, 2018

கஜா புயலை எதிர்கொள்ள முன்னேற்பாடு: அதிகாரிகளுடன் தலைமை செயலளார் ஆலோசனை!

கஜா புயலை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

கஜா புயலை எதிர்கொள்ள முன்னேற்பாடு: அதிகாரிகளுடன் தலைமை செயலளார் ஆலோசனை!

வங்கக் கடலில் உருவாகியுள்ள கஜா புயல் நவம்பர் 15ம் தேதி கடலூர் - பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என்றும் சென்னையில் இருந்து 720 கி.மீ. தொலைவில் உருவாகியுள்ள கஜா புயல் வரும் 24 மணிநேரத்தில் தீவிரமடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், மேற்கு மற்றும் தென் மேற்காக நகர்ந்து வரும் 24 மணி நேரத்தில் தீவிர புயல் சின்னமாக வலுப்பெற்று அடுத்த 24 மணி நேரத்தில் அதே தீவிரத்துடன் நீடிக்கும். அதன்பிறகு மேற்கு தென்மேற்காக நகர்ந்து சற்று வலுவிழந்து வடக்கு தமிழகக் கடற்பரப்பில் கடலூர் - பாம்பன் பகுதிகளுக்கு இடைப்பட்ட தூரத்தில் நவம்பர் 15ம் தேதி கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புயல் சின்னமானது சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு அரபிக் கடல் மற்றும் லட்சத் தீவுகளை தொட்டபடி விரிந்து பரந்து உள்ளது.

இதன் காரணமாக வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவின் ஒரு சில இடங்களில் நவம்பர் 14ம் தேதி இரவு முதல் கன மழை பெய்யக் கூடும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கஜா புயலை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் காவல்துறை, பேரிடர் மேலாண்மை குழு மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். கடலோர காவல்படை, விமானப்படை மற்றும் ராணுவ அதிகாரிகளுடன் கிரிஜா வைத்தியநாதன் ஆலோசனை நடத்தினார்.


 

.