This Article is From Jan 03, 2020

“NRC-க்கு அதிமுக ‘நோ’ சொல்லும்..!”- போட்டுடைத்த ADMK முக்கியப்புள்ளி!!

Anwar Raja on NRC - "அதிமுகவும் என்ஆர்சி குறித்து தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளும். அது குறித்து நானே தனிப்பட்ட முறையில் முதல்வர் மற்றும் துணை முதல்வரிடத்தில் பேசுவேன்"

“NRC-க்கு அதிமுக ‘நோ’ சொல்லும்..!”- போட்டுடைத்த ADMK முக்கியப்புள்ளி!!

Anwar Raja on NRC - "சீக்கிரமே அதிமுக தன் நிலையைத் தெரிவிக்கும்"

Anwar Raja on NRC - குடியிரிமை திருத்தச் சட்டமான சிஏஏ-வுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களித்தது பாஜகவின் கூட்டணிக் கட்சியான அதிமுக. அதே நேரத்தில் பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் பல கட்சிகளும், தேசிய குடிமக்கள் பதிவேடான என்ஆர்சி-ஐ, தங்கள் மாநிலங்களில் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளன. முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “நாடு முழுவதும் என்ஆர்சி அமல் செய்யப்படும்,” என்று முழங்கியது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட சூழலில் அதிமுகவின் மூத்த நிர்வாகியும் முன்னாள் எம்பியுமான அன்வர் ராஜா, “என்ஆர்சி குறித்த தனது நிலைப்பாட்டை அதிமுக மாற்றிக் கொள்ளும்,” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்துப் பேசியுள்ள அன்வர் ராஜா, “சிஏஏவுக்கு ஆதரவாக வாக்களித்த போது, அதில் நாட்டில் இருக்கும் முஸ்லிம் சிறுபான்மையினர்களுக்கு எந்த வித பாதிப்பும் இல்லை என்று மத்திய அரசு உறுதியளித்தது. அதே நேரத்தில் என்ஆர்சி-ஐ அமல் செய்தால், நாட்டில் இருக்கும் முஸ்லிம்கள் தங்களது குடியுரிமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவார்கள். பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் பல கட்சிகளே, தங்கள் மாநிலங்களில் என்ஆர்சி-ஐ அனுமதிக்க மாட்டோம் என்று கூறியுள்ளன.

எனவே, அதிமுகவும் என்ஆர்சி குறித்து தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளும். அது குறித்து நானே தனிப்பட்ட முறையில் முதல்வர் மற்றும் துணை முதல்வரிடத்தில் பேசுவேன். சீக்கிரமே அதிமுக தன் நிலையைத் தெரிவிக்கும்,” என்று உறுதிபட கூறியுள்ளார். 

ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கும் நிலையில், தமிழக எதிர்க்கட்சியான திமுக, அதிமுகவை விட பல இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இது குறித்து முன்னர் பேசிய அன்வர் ராஜா, “சிஏஏவுக்கு ஆதரவாக அதிமுக இருப்பதனால், சிறுபான்மையின மக்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை. சிறுபான்மையினரின் நம்பிக்கையை அதிமுக இழந்துள்ளதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன,” என்று கூறியிருந்தார். 

.