This Article is From Feb 23, 2019

கார் விபத்தில் விழுப்புரம் அதிமுக எம்.பி. ராஜேந்திரன் உயிரிழப்பு

2014 நாடாளுமன்ற தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ராஜேந்திரன்.

கார் விபத்தில் விழுப்புரம் அதிமுக எம்.பி. ராஜேந்திரன் உயிரிழப்பு

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜேந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஹைலைட்ஸ்

  • விழுப்புரம் தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்
  • திண்டிவனம் அருகே இன்று அதிகாலையில் விபத்து ஏற்பட்டது
  • தலை, மார்பில் காயம் ஏற்பட்ட ராஜேந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
Chennai:

சாலை விபத்தில் சிக்கி விழுப்புரம் தொகுதி அதிமுக எம்.பி. ராஜேந்திரன் இன்று காலை உயிரிழந்தார். அவருக்கு வயது 62.

திண்டிவனம் அருகே இந்த விபத்து நடந்திருக்கிறது. இன்று அதிகாலையில் தனது சொந்த ஊரான ஜக்கம்பேட்டையில் இருந்து சென்னையை நோக்கி ராஜேந்திரனின் கார் சென்று கொண்டிருந்தது. திண்டிவனம் அருகே வந்தபோது சாலைத் தடுப்பு மீது மோதி கார் விபத்துக்குள்ளானது.

இதில் தலை மற்றும் மார்புப் பகுதியில் படுகாயம் அடைந்த ராஜேந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ராஜேந்திரனின் வீட்டிற்கு சென்ற சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

ராஜேந்திரனுடன் வந்த கார் டிரைவரின் உயிருக்கு ஆபத்து ஏதும் ஏற்படவில்லை. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜேந்திரன நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பது என்பது இதுவே முதல்முறை ரசாயனம் மற்றும் உரம் தொடர்பான நிலைக்குழுவின் உறுப்பினர், விமானப் போக்குவரத்து அமைச்சக ஆலோசனை குழு உறுப்பினர் என்பது உள்ளிட்ட பொறுப்புகளையும் அவர் வகித்து வந்தார்.

.