இதுதான் இந்தியர்களின் நிறம்- ஃபேர்னஸ் க்ரீம் விளம்பரத்தில் நடிக்க மறுத்த சாய்பல்லவி

நம் நிறம் என்பது இந்தியர்களின் நிறம். நாம் வெளிநாட்டினர் போல வெள்ளையாக மாறவேண்டியதில்லை.

 Share
EMAIL
PRINT
COMMENTS
இதுதான் இந்தியர்களின் நிறம்- ஃபேர்னஸ் க்ரீம் விளம்பரத்தில் நடிக்க மறுத்த சாய்பல்லவி

சாய்பல்லவி (Image courtesy: Instagram)


New Delhi: 

ஹைலைட்ஸ்

  1. நம் நிறம் என்பது இந்தியர்களின் நிறம் - சாய் பல்லவி
  2. 'அப்படிப்பட்ட விளம்ரங்களில் வரும் பணத்தை வைத்து என்ன செய்யப் போகிறேன்'
  3. 'பிரேமம்' படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் சாய் பல்லவி

நடிகை சாய் பல்லவி ஃபேர்னஸ் க்ரீம் விளம்பரத்தில் நடிக்க  மறுத்துள்ளார். மலையாள படமான பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமானவர் சாய் பல்லவி. அந்தப் படத்தில் ‘மலர்' என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அந்தக் கதாபாத்திரம் இளைஞர் மத்தியிலும் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது. 

தெலுங்கு பிஹைண்ட் வெப்ஸைட்டிற்கு கொடுத்த நேர்காணலில் தனக்கு ஃபேர்னஸ் க்ரீம் விளம்பரத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததாகவும் ஆனால் அதை புறக்கணித்ததாகவும் தெரிவித்தார். “நம் நிறம் என்பது இந்தியர்களின் நிறம். நாம் வெளிநாட்டினர் போல வெள்ளையாக மாறவேண்டியதில்லை. வெள்ளையாக இருப்பவர்களுக்கு கேன்சர் நோய் வருவதைப் பார்க்கலாம். நம் நிறம் நமக்கானது. ஆப்ரிக்கர்கள் அவர்களுக்கென நிறத்தை பெற்றிருக்கிறார்கள்.

 “இத்தகைய விளம்பரத்தில் நடித்து பெறும் பணத்தை வைத்து என்ன செய்யப்போகிறேன். வீட்டிற்கு சென்று 3 சப்பாத்தியோ அல்லது சிறிதளவு சாதமோ சாப்பிட்டுவிட்டு  என் காரில் ஊர் சுற்றுவேன் இதைத்தாண்டி செய்ய எனக்கு தேவையென்று ஏதுமில்லை. என்னைச் சுற்றி இருக்கும் மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்க விரும்புகிறேன்" என்று கூறியுள்ளார்.

இதேபோல் ஹிந்தி நடிகை கங்கணா ரணாவத் ஃபேர்னஸ் க்ரீம் விளம்பரத்தில் நடிக்க மறுத்தது குறிப்பிடத்தக்கது. இயக்குநரும் நடிகையுமான நந்திதா தாஸ் ‘டார்க் இஸ் பியூட்டிஃபுல்' பிரச்சாரத்தை நடத்துகிறார். அவர் ஐஏஎன்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியது என்னவெனில் “இந்த  விளம்பரங்களினால் பெண்கள் தாழ்வு மனப்பான்மையை அடைகின்றனர். இந்த விளம்பரங்கள் நீங்கள் வெள்ளையாக இல்லையென்றால் காதலனை அல்லது கணவனை, வேலையைக் கூட பெற முடியாது என்று மறைமுகமாகக் கூறுகிறது. இது பெண்களின் தன்மானத்தைக் குறைக்கும் செயல்ர்” என்று கூறியுள்ளார்.

நேர்காணலில் சாய்பல்லவி சிறு வயதில் தனது சகோதரி அழகாக இருக்க வேண்டுமென்றால் நிறைய பழங்கள் காய்கறிகள் சாப்பிட வேண்டுமென கூறியுள்ளார். ஆனால், நான் சாப்பிடுவது போல் ஏமாற்றியுள்ளேன். இப்போது பார்த்தால் என் அக்கா என்னைவிட 5 வயது இளையவள் போல் இருக்கிறாள் என்று கூறினார். 

சாய்பல்லவி அதிரன்  மற்றும் செல்வராகவன் படத்தில் என்ஜிகேவில் நடித்துள்ளார். சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................