'ப்ளாஸ்டிக் சர்ஜரி' செய்து கொண்டாரா பிரபல நடிகை! இணையதளங்களில் வைரலாகும் ஃபோட்டோ!!

சல்மான் கான் நடித்துள்ள பாரத் திரைப்படத்தின் பிரீமியர் ஷோ நேற்று ஒளிபரப்பப்பட்டது. இதனை ஏராளமான பிரபலங்கள் கண்டு ரசித்தனர்.

'ப்ளாஸ்டிக் சர்ஜரி' செய்து கொண்டாரா பிரபல நடிகை! இணையதளங்களில் வைரலாகும் ஃபோட்டோ!!

பாரத் திரைப்படத்தின் பிரீமியர் ஷோவில் மௌனி ராய்

ஹைலைட்ஸ்

  • நாகினி சீரியலில் நடித்து பிரபலம் அடைந்தவர் மௌனி ராய்
  • முன்பை விட ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்தபின்னர் முகம் மோசமாக உள்ளதென விமர்சனம்
  • ரன்பி கபூரின் பிரமாஸ்திரா படத்தில் மௌனி நடித்து வருகிறார்.
New Delhi:

பிரபல நடிகை மௌனி ராயின் புதிய தோற்றம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சல்மான் கானின் பாரத் திரைப்படத்தின் பிரிமியர் ஷோவை மெளனி ராய் கண்டு ரசித்தார். 

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணைய தளத்தில் வைரலாகி வருகின்றன. மௌனியின் முகத்தோற்றம் சற்று மாறுபட்டுக் காணப்படுகிறது. அவர் ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டாரா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

dql9mp98

இன்ஸ்டாகிராமல் அரவது போட்டோவுக்கு கமென்ட் அடித்துள்ள ரசகிர்கள், 'மெளனி ராயின் முகத்திற்கு என்ன ஆச்சு? ஒவ்வொரு மாதமும் அவரது முகம் மாறுபட்டு வருகிறது. இது ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதன் விளைவு' என்று கூறியுள்ளனர். 

இன்னொரு கமென்ட்டில், 'ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்வதற்கு முன்பு முகம் நன்றாக இருந்தது. இப்போது படு கேவலமாக உள்ளது.' என்று கூறியுள்ளார். 

நாகினி சீரியல் மூலம் சின்னத்திரை உலகில் பிரபலமாக இருந்த மெளனி ராய்க்கு பாலிவுட் வாய்ப்புகள் குவியத் தொடங்கின. இருப்பினும் 'போலே சுதியான்' திரைப்படத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இந்த விவகாரம் சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. தற்போது ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடித்து வரும் பிரமாஸ்திரா திரைப்படத்தில் மௌனி நடித்து வருகிறார்.