சிறுத்தைப் புலிகளுடன் கொஞ்சி விளையாடிய பிரபல நடிகை! இணையத்தில் வைரலாகும் ஃபோட்டோ!!

நடிகை வெளியிட்டுள்ள சிறுத்தைப் புலிகளுடன் இருக்கும் புகைப்படம் இன்ஸ்டாகிராமில் 3 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை அள்ளியுள்ளது.

சிறுத்தைப் புலிகளுடன் கொஞ்சி விளையாடிய பிரபல நடிகை! இணையத்தில் வைரலாகும் ஃபோட்டோ!!

சிறுத்தைப் புலிகளுடன் க்ரித்தி சனோன்.

New Delhi:

ஸாம்பியா நாட்டிற்கு சென்றுள்ள பிரபல இந்தி நடிகை க்ரித்தி சனோன் அங்கு சிறுத்தைப் புலிகளுடன் கொஞ்சி விளையாடினார். அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணைய தளங்களில் வைரலாகி வருகிறது. 

28 வயதாகும் நடிகை க்ரித்தி சனோன் தெற்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஸாம்பியா நாட்டில் விடுமுறையை உற்சாகத்துடன் கழித்து வருகிறார்.  இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் க்ரித்திக்கு அர்ஜுன் பாட்டியலா, ஹவுஸ்ஃபுல் 4, பானிபட் உள்ளிட்ட படங்கள் கைவசம் உள்ளன. 

He wanted a selfie!! Couldn't say no.. #Zambia

A post shared by Kriti (@kritisanon) on

Victoria Falls #Zambia : @the.mad.hair.scientist

A post shared by Kriti (@kritisanon) on

2014-ல் ஹீரோ பன்டி திரைப்படத்தில் அவர் அறிமுகம் ஆனார். தில்வாலே, ராப்தா, ப்ரேலி கி பர்ஃபி உள்ளிட்ட படங்கள் க்ரித்திக்கு புகழைத் தேடித் தந்தன. 

ஸாம்பியாவில் தனது நண்பர்களுடன் இருக்கும் க்ரித்தி சிறுத்தைப் புலிகளுடன் எடுத்த புகைகளை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர். பதிவிட்ட சில மணி நேரங்களில் அந்த புகைப்படம் 3 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை அள்ளியுள்ளது. 

க்ரித்தி சனோனை இன்ஸ்டாவில் 2.28 கோடி பேர் பின் தொடர்கின்றனர்.