பெட்ரோல் பங்கில் துன்புறுத்தல்!! பிரபல டிவி நடிகையின் புகாரால் பரபரப்பு!

போலீசில் நடிகை புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பெட்ரோல் பங்கில் துன்புறுத்தல்!! பிரபல டிவி நடிகையின் புகாரால் பரபரப்பு!

தனக்கு நேர்ந்தவற்றை சமூக வலைதளத்தில் நடிகை பகிர்ந்து கொண்டதால் பரபரப்பு காணப்பட்டது.

Kolkata:

பிரபல டிவி நடிகை ஜூஹி செங்குப்தா, பெட்ரோல் பங்க்கில் தனது தந்தையை ஊழியர்கள் தாக்கியதாகவும், தன்னை துன்புறுத்தியதாகவும் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

மேற்கு வங்க மாநிலத்தில் பிரபல டிவி நடிகையாக இருப்பவர் ஜூஹி செங்குப்தா. இவர், 'போஜோ கோவிந்தோ' என்ற டிவி சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார்.

இந்த நிலையில் கொல்கத்தாவில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் எரிபொருள் நிரப்புவதற்காக தனது காரில் ஜூஹி நேற்று சென்றார். அப்போது அவருடன் பெற்றோரும் இருந்தனர். ரூ. 1500-க்கும் டீசல் போட வேண்டும் என்று நடிகையின் தந்தை சொல்ல, பங்க் ஊழியர் ரூ. 3 ஆயிரத்திற்கு எரிபொருளை நிரப்பினார்.

இதையடுத்து, கூடுதலாக ஏன் எரிபொருள் நிரப்பினீர்கள் என்று ஜூஹியின் தந்தை கேட்டிருக்கிறார். இதற்கு ஊழியர்கள் சற்று தகாத முறையில் பதில் கூறியதாக தெரிகிறது. இதன்பின்னர் வாக்குவாதம் தொடரவே, ஊழியர்கள் ஜூஹியின் தந்தையை தாக்கியதாக கூறப்படுகிறது. 

இதையடுத்து, போலீசில் ஜூஹி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரு தரப்பினரையும் விசாரித்தனர். முடிவில் காவல் நிலையத்தில் இரு தரப்புக்கும் இடையே சமாதானம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தையெல்லாம் ஜூஹி செங்குப்தா தனது சமூக வலைதள பக்கங்களில் விவரித்ததால், விஷயம் மேற்கு வங்கம் முழுவதும் பரவியது. 

கடைசியாக, 'கொல்கத்தா நகரம் யாருக்கும் பாதுகாப்பானதாக இல்லை' என்று ஜூஹி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.