தூர்தர்ஷன் நேரலையில் பங்கேற்ற சமூக ஆர்வலர் மாரடைப்பால் மரணம்

ஜனவரி மாதம் கேரளாவில் கலை நிகழ்ச்சி நடத்தி கொண்டிருந்த நடனக் கலைஞர் கீதாநந்தன் உயிரிழந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது

 Share
EMAIL
PRINT
COMMENTS
தூர்தர்ஷன் நேரலையில் பங்கேற்ற சமூக ஆர்வலர் மாரடைப்பால் மரணம்

ஜம்மு காஷ்மீர் கலைக் கூடத்தின் செயலாளராக இருந்தார் ரீட்டா


Srinagar: 

ஶ்ரீநகரில் நடைப்பெற்ற தூர்தர்ஷன் நேரலை நிகழ்ச்சியில், பிரபல சமூக ஆர்வலர் ரீட்டா ஜெதேந்தர் இன்று கலந்து கொண்டுள்ளார். ஜம்மு காஷ்மீர் கலைக் கூடத்தின் செயலாளராக இருந்த ரீட்டா, நிகழ்ச்சியில் உரையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது, எதிர்பாராத விதமாக ரீட்டாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. நிகழ்ச்சி நேரலையிலேயே, உடல் நலக் குறைவால் ரீட்டா உயிரிழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ரீட்டா ஜெதேந்தரின் மறைவுக்கு, பல தரப்பில் இருந்தும் இரங்கல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதைப் போல, கடந்த ஜனவரி மாதம் கேரளாவில் நடைப்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில், கலை நிகழ்ச்சி நடத்தி கொண்டிருந்த நடனக் கலைஞர் கீதாநந்தன் உயிரிழந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது
 சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................