போபாலில் ரியாலிட்டி ஷோ பங்கேற்பாளர் மீது ஆசிட் வீச்சு..!

ரூபாலியின் கண்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அது அமிலமா என்பது தெரியவில்லை

 Share
EMAIL
PRINT
COMMENTS
போபாலில் ரியாலிட்டி ஷோ பங்கேற்பாளர் மீது ஆசிட் வீச்சு..!

சிசிடிவி பதிவில் சோனு, ரூபாலி மீது ஆசிட் வீசும் காட்சி


Bhopal: 

மத்திய பிரதேச மாநில இந்தூரில் ரியாலிட்டி ஷோ பங்கேற்பாளர் மீது பட்டப் பகலில் ஆசீட் வீசப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் ரியாலிட்டி ஷோ பங்கேற்பாளர் ரூபாலி நிரப்பூரின் கண்ணில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ரூபாலி, அமெரிக்காவில் நடக்க உள்ள ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க புறப்பட இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது தான் இந்த ஆசீட் வீச்சு சம்பவம் நடந்துள்ளது.

ரூபாலி மீது ஆசீட் வீசியவர் சோனு என்கின்ற மகேந்திரா என்பதும், அவர் ரூபாலியுடன் நடன வகுப்பில் ஒன்றாக பயின்று வந்தவர் என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோனுவை காவல் துறை கைது செய்து விசாரித்து வருகிறது. ரூபாலியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சோனு தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். சோனுவின் கோரிக்கையை ரூபாலி மறுத்ததால், அவர் மீது ஆசீட் வீசியுள்ளார்.

lpr2iso

ஆசீட் வீசிய சோனு என்கின்ற மகேந்திராவை போலீஸ் கைது செய்துள்ளது

இது குறித்து உள்ளூர் போலீஸ் அதிகாரி, பிரசாந்த் சவுபே, ‘சோனு, ரூபாலியை அவரது வீட்டிலிருந்து வெளியே அழைத்துள்ளார். அப்போது ரூபாலி மீது ஒரு திரவத்தை சோனு ஊற்றியுள்ளார். அதனால், ரூபாலியின் கண்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அது அமிலமா என்பது தெரியவில்லை. ஆனால், அது என்ன என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................