உயர் கல்விக்காக அமெரிக்கா சென்ற இந்திய மாணவர் சுட்டுக்கொலை! உடலை கொண்டுவருவதில் சிக்கல்!!

பெற்றோர் கண்ணீர் வடித்து தவித்துக் கொண்டிருக்க, அபிஷேக்கின் உடலை மீட்டு வருவதற்காக அவரது சகோதரர் அமெரிக்கா விரைந்துள்ளார். படிப்புக்காக சென்ற இடத்தில் இந்திய மாணவர் உயிரைப் பறிகொடுத்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. 

உயர் கல்விக்காக அமெரிக்கா சென்ற இந்திய மாணவர் சுட்டுக்கொலை! உடலை கொண்டுவருவதில் சிக்கல்!!

மாணவர் அபிஷேக் சுதீஷ் பட்.

Bengaluru:

உயர்கல்விக்காக அமெரிக்காவுக்கு சென்ற இந்திய மாணவர் அபிஷேக் சுதீஷ் பட் (வயது 25) ஒரு ஓட்டலில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.இந்த சம்பவத்திற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை.

கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் குவேம்பு நகரை சேர்ந்தவர் அபிஷேக் சுதீஷ் பட். கணினி அறிவியல் பிரிவில் இளநிலை பட்டப்படிப்பை முடித்த அவர், உயர் கல்விக்காக அமெரிக்காவின் கலிபோர்னியா மகாணத்திற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பாக சென்றார். அவரது படிப்பு முடிவதற்கு இன்னும் 4 மாதங்களே உள்ளன. 

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு 11.30-க்கு அபிஷேக்கின் பெற்றோருக்கு வந்த அழைப்பு அவர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. பகுதிநேர வேலையாக அபிஷேக் வேலை செய்த ஓட்டலில் வைத்து, மர்ம நபர் ஒருவர் அவரை சுட்டுக் கொன்றதாக பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. 

இதையறிந்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இந்திய தூதுரகத்தை தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளனர். அபிஷேக் கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை. 

சம்பவம் நடந்த சான் பெர்னான்டினே பகுதியில் புயல் காற்று வீசி வருவதால் அபிஷேக்கின் உடலை மீட்பதில் சிக்கல் எழுந்துள்ளது. 