சொராபுதீன் போலி என்கவுன்ட்டர் வழக்கு: டிசம்பர் 21-ல் தீர்ப்பு!

சொராபுதீன் போலி என்கவுன்ட்டர் வழக்கில், மும்பையில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வரும் 21 ஆம் தேதி தீர்ப்பு வழங்கும் என்று அறிவித்துள்ளது

 Share
EMAIL
PRINT
COMMENTS

இந்த வழக்கில் முதலில் குற்றம் சாட்டப்பட்டிருந்த பாஜக தலைவர் அமித்ஷா, பின்னர் வழக்கிலிருந்து கடந்த 2014 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டார்


New Delhi: 

சொராபுதீன் போலி என்கவுன்ட்டர் வழக்கில், மும்பையில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வரும் 21 ஆம் தேதி தீர்ப்பு வழங்கும் என்று அறிவித்துள்ளது.

சொராபுதீன் ஷேக் என்ற ஒரு சிறிய குற்றவாளி, குஜராத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார். சொராபுதீனைக் கொன்றதற்கு குஜராத் போலீஸ், ‘அவன் ஒரு தீவிரவாதி' என்று குற்றம் சாட்டியது. சொராபுதீனின் மனைவி கவுசி பி-யும் கொல்லப்பட்டார்.

என்கவுன்ட்டர் நடக்கும் போது, சொராபுதீன் தம்பதியுடன் இருந்த துல்சிராம் பிரஜபதி, வழக்கிற்கான சாட்சியாக மாறினார். அவரும் ஓராண்டு கழித்துக் கொல்லப்பட்டார்.

சில ரகசியங்கள் வெளிவரக் கூடாது என்பதற்காகவே, இந்தக் கொலைகள் செய்யப்பட்டதாக புலன் விசாரணையில் தெரியவந்தது. இந்தக் கொலைகளுக்குப் பின்னால் ஆந்திரா, குஜராத் மற்றும் ராஜஸ்தான் அரசியல்வாதிகள் இருந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த வழக்கில் முதலில் குற்றம் சாட்டப்பட்டிருந்த பாஜக தலைவர் அமித்ஷா, பின்னர் வழக்கிலிருந்து கடந்த 2014 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டார்.

அதேபோல குஜராத்தில் இருக்கும் கீழ்நிலை நீதிமன்றம், இந்த வழக்கு குறித்து விசாரிக்கையில், குற்றம் சுமத்தப்பட்டிருந்த பல அதிகாரிகளை விடுவித்து உத்தரவிட்டது. அப்படி இருந்தும், இன்னும் 22 அதிகாரிகளின் பெயர் விடுவிக்கப்படாமல் உள்ளது. அவர்கள் குறித்துத்தான் வரும் 21 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள ஒவ்வொரு தொகுதிகளில் (Election Results in Tamil) இருந்தும் லேட்டஸ்ட் செய்திகள் & (Live Updates in Tamil) குறித்து தெரிந்து கொள்ள எங்கள் Facebook, Twitter பக்கங்களைப் பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................