ஏ.ஆர்.ரஹ்மான தயாரிப்பில் வெளிவரவுள்ள '99 சாங்ஸ்'

விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். இந்த படம் ஏ.ஆர். ரஹ்மான் பேனரில் வெளிவரவுள்ளது. இதன் பின்னணியில் ஒய்.எம். மூவிஸ், மற்றும் ஜூயோ ஸ்டுடியோஸ் ஆகியவை உள்ளது. 

ஏ.ஆர்.ரஹ்மான தயாரிப்பில் வெளிவரவுள்ள '99 சாங்ஸ்'

ஆஸ்கார் மற்றும் கிராமி விருதுகளை பெற்ற இசைக்கலைஞர் ஏ.ஆர். ரஹ்மான தன்னுடைய தயாரிப்பில் வெளியான '99 சாங்ஸ்' படத்தின் பாடல் வெளியீடு ஜூன் 15 வெளியாகும் என்று அறிவித்துள்ளார். இந்த படம் தமிழ்,தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளிவரவுள்ளது.

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பதிவிட்ட ட்விட்டரில் “ என் முதல் திரைப்படத்தை தயாரித்து எழுத்தாளராகவும் வெளியாகவுள்ள '99 சாங்ஸ்' படம் குறித்த அறிவிப்பை செய்வதில் அளவில்லா மகிழ்ச்சியடைகிறேன்.இளமையான தீவிரமான ஒரு காதல் கதை, அதில் இசை அதன் ஆன்மாவாக இருக்கும். '99 சாங்க்ஸ்' 3 மொழிகளில் ஜூன் 21 அன்று வெளிவரவுள்ளது. எனக்கு அன்பையும் ஆதரவையும் கொடுக்கும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

s7d93208

விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். இந்த படம் ஏ.ஆர். ரஹ்மான் பேனரில் வெளிவரவுள்ளது. இதன் பின்னணியில் ஒய்.எம். மூவிஸ், மற்றும் ஜூயோ ஸ்டுடியோஸ் ஆகியவை உள்ளது. 

ரஹ்மான் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த படத்தில் வேலை செய்து வருகிறார். இந்த படம் ஒரு  காதல் இசைப் படமாக இருக்கும். இந்தப் படத்தில் புது முகமாக எஹான் பாட், எடிஸ்ஸி வர்கீஸ் மற்றும் டென்சின் தல்ஹா ஆகியோர் நடித்துள்ளனர்.