விமானத்தில் புகை பிடித்தவருக்கு நேர்ந்த சோதனை..!

கோவாவில் விமானம் தரையிறங்கிய உடன், காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட பயணி மீது புகார் அளிக்கப்பட்டது

 Share
EMAIL
PRINT
COMMENTS
விமானத்தில் புகை பிடித்தவருக்கு நேர்ந்த சோதனை..!

விமானப் பயணத்தின் போது ஒரு பயணி, கழிவறைக்குள் சென்று புகை பிடித்துள்ளார்


Panaji: 

நேற்று அகமதாபாத்திலிருந்து கோவாவுக்கு இண்டிகோ நிறுவன பயணிகள் விமானம் சென்றது. விமானப் பயணத்தின் போது ஒரு பயணி, கழிவறைக்குள் சென்று புகை பிடித்துள்ளார். புகை நாற்றம் விமானத்துக்குள் அதிகமாக வரவே, விமான அதிகாரிகள் கழிவறைக் கதவை தட்டியுள்ளனர். 

வெளியே வந்த அந்தப் பயணியிடம், ‘ஏன் புகை பிடித்தீர்கள்..?' என்று கறாராக கேக்வி எழுப்பியுள்ளனர். அவர் அதற்கு சரிவர பதில் சொல்லவில்லை என்பதால், விமானக் குழு கேப்டனுக்கு தகவல் தெரிவித்துள்ளது. கேப்டன், பயணியிடம், ‘விமானத்தில் புகை பிடிப்பது சட்டப்படிக் குற்றம்' என்று கூறி கண்டித்துள்ளார். 

கோவாவில் விமானம் தரையிறங்கிய உடன், காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட பயணி மீது புகார் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அவர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. 

கடந்த வாரம் டெல்லியிலிருந்து புறப்பட இருந்த விஸ்தரா நிறுவன விமானத்தில் ஏறிய பயணி ஒருவர், ‘நான் புகை பிடிக்க வேண்டும்' என்று கோரியுள்ளார். இதை விமானக் குழு மறுக்கவே, இரு தரப்புக்கும் இடையில் கடும் வாக்குவாதம் நடந்தது. இதனால், விமானம் 3 மணி நேரம் தாமதமானது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................