ரஷ்ய அதிபர் புதினுக்கு விரைவில் திருமணமா? மணப்பெண் யார்?

‘மதிக்கத்தக்க நபராக நான் இருக்கும்போது, நான் மறுமணம் செய்து கொள்வது அவசியம் தான்’ என சிரித்துக் கொண்டே புதின் பதில் கூறினார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
ரஷ்ய அதிபர் புதினுக்கு விரைவில் திருமணமா? மணப்பெண் யார்?

1983 ஆம் ஆண்டு லுட்மீலியா புடினாவுடன் (Lyudmila Putina) திருமணம் ஆன நிலையில், கடந்த 2013 ஆம் ஆண்டு புதின் விவாகரத்து செய்து கொண்டனர்.


Moscow: 

ரஷ்ய நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் தான் விரைவில் மருமணம் செய்துகொள்ளப் போவதாக கடந்த வியாழக்கிழமையன்று அறிவித்தார். அறிவிப்பு மட்டுமே வந்துள்ள நிலையில் யாரை மறுமணம் செய்துகொள்ளப் போகிறார் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.

66 வயதான அதிபர் புதின், தனது குடும்ப காரியங்களை மிகவும் தனிப்பட்ட முறையில் கவனித்துக்கொள்ளும் பழக்கம் உடையவர். அவருக்கு 1983 ஆம் ஆண்டு லுட்மீலியா புடினாவுடன் (Lyudmila Putina) திருமணம் ஆன நிலையில், கடந்த 2013 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர். அவர்களுக்கு 30 வயதுகளில் கேத்தரினா மற்றும் மரியா என இரு மகள்கள் உள்ளனர். அவர்கள் யாரும் அரசியல் மற்றும் மக்கள் பார்வையில் இருப்பதில்லை.

சமீபத்தில் பத்திரிக்கையாளர்களுடன் நடந்த சந்திப்பில் வெளியுறவுத்துறை மற்றும் நாட்டின் பொருளதாரத்தை பற்றியும் கேள்விகள் எழுப்பபட்டன. அதைத்தொடர்ந்து பத்திரிகையாளர் அவர் எப்போது மறுமணம் செய்துகொள்ளப் போகிறீர்கள் என கேள்வி  எழுப்பினார், அதற்கு பதிலளித்த அதிபர் புதின் ‘மதிக்கத்தக்க நபராக நான் இருக்கும்போது, நான் மறுமணம் செய்து கொள்வது அவசியம் தான்' என சிரித்துக் கொண்டே பதில் கூறினார்.

தனது விவாகரத்தை தொடர்ந்து அதிபர் புதின் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான  அலீனா காபாயேவாவை காதலிப்பதாகவும் தனது பெயரில் உள்ள சொத்துக்களை அலீனாவின் தங்கை மற்றும் பாட்டியின் பெயருக்கு மாற்றிவிட்டதாக தகவல் வெளியானது.

இதுபோன்ற செய்திகளை அதிபர் புதின் தொடர்ந்து மறுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)


சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................