2-ம் வகுப்பு மாணவனை ஷூவால் அடித்த ஆசிரியர்..! - புகாருக்கு உள்ளான வீடியோ

உத்தர பிரதேச மாநிலத்தின் அலிகர் பகுதியில் இரண்டாம் வகுப்பு மாணவன் ஒருவனை டியூஷன் ஆசிரியர் செருப்பால் அடித்துத் துன்புறுத்தும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன

2-ம் வகுப்பு மாணவனை ஷூவால் அடித்த ஆசிரியர்..! - புகாருக்கு உள்ளான வீடியோ

உ.பி-யில் அலிகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது

ஹைலைட்ஸ்

  • இந்த சம்பவம் கடந்த 15-ல் நடந்துள்ளது
  • பெற்றோருக்கு இது குறித்து தெரிய வந்து, அதிர்ச்சியடைந்துள்ளனர்
  • சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது
Aligarh:

உத்தர பிரதேச மாநிலத்தின் அலிகர் பகுதியில் இரண்டாம் வகுப்பு மாணவன் ஒருவனை டியூஷன் ஆசிரியர் செருப்பால் அடித்துத் துன்புறுத்தும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.

மாணவன் உடலில் திடீரென ஏற்பட்டிருக்கும் காயம் குறித்து விசாரித்த பெற்றோர்கள் டியூஷன் அறையின் சிசிடிவி வீடியோ காட்சியைப் பார்த்த பின்னர் அதிர்ந்து போய், அந்த ஆசிரியர் மீது புகார் அளித்துள்ளனர்.

கடந்த நவம்பர் 15-ம் தேதி கைப்பற்றப்பட்ட வீடியோ ஆதாரத்தின் பெயரில் அந்த டியூஷன் ஆசிரியர் மீது புகார் பதிவு செய்யப்பட்டது. அவரைத் தேடி வருவதாக போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.

ஐந்து நிமிடங்கள் நீடிக்கும் அந்த வீடியோ பதிவில் ஆசிரியர் அந்த மாணவனை ஷூ கொண்டு அடித்தும் தலை முடியைப் பிடித்து இழுத்தும் கைகளிலும் முதுகிலும் பல முறை அடிக்கிறார். பின்னர் அந்த மாணவனுக்கு குடிக்க தண்ணீரும் கொடுத்து குடிக்கச் சொல்லி சிரிக்கும்படியும் வற்புறுத்துவது அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.

Listen to the latest songs, only on JioSaavn.com