ஆசை ஆசையாய் வளர்த்த ‘பறவையே’ உரிமையாளரை கொன்ற சம்பவம்; அமெரிக்காவில் அதிர்ச்சி!

மார்வின் என்ற முதியவர் அவருடைய தோட்டத்தில் சில விலங்குகளையும், கேஸ்ஸோவரீஸ் உள்ளிட்ட கொடிய வகைப் பறவை இனங்களையும் வளர்த்து வந்துள்ளார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
ஆசை ஆசையாய் வளர்த்த ‘பறவையே’ உரிமையாளரை கொன்ற சம்பவம்; அமெரிக்காவில் அதிர்ச்சி!

தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது, தான் வளர்த்து வந்த கேஸ்ஸோவரீஸ் பறவையால் தாக்கப்பட்டுள்ளார்


அமெரிக்காவின் ஃப்ளோரிடாவைச் சேர்ந்த மார்வின் என்ற முதியவர், மிகவும் ஆபத்தான ஒரு பறவையால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகில் உள்ள மிகவும் ஆபத்தான பறவை இனங்களில் கேஸ்ஸோவரீஸ் பறவை இனமும் ஒன்று. இது மனிதனுக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது என்று சொல்லப்படுகிறது. குயின்ஸ்லாந்து, ஆஸ்திரேலியா, நியூகினியா உள்ளிட்ட வெப்பமண்டல பகுதிகளில் இந்தக் கொடிய பறவையின் மூன்று இனங்கள் காணப்படுகின்றன. இந்தப் பறவையின் கால்கள்தான் மிகவும் ஆபத்தானது. 3 விரல்களுடன் கூடிய நகங்கள் மனிதர்களை கொல்லும் அளவிற்கு ஆற்றல் வாய்ந்த்து. காட்டிற்குள் இருக்கும் இவை சில சமயங்களில் உணவிற்காக மனிதர்கள் வாழும் இடங்களுக்கு வருவது வழக்கம்.

ஃப்ளோரிடாவைச் சேர்ந்த 75 வயதான மார்வின் என்ற முதியவர் அவருடைய தோட்டத்தில் சில விலங்குகளையும், கேஸ்ஸோவரீஸ் உள்ளிட்ட கொடிய வகைப் பறவை இனங்களையும் வளர்த்து வந்துள்ளார். தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது, தான் வளர்த்து வந்த கேஸ்ஸோவரீஸ் பறவையால் தாக்கப்பட்டுள்ளார். இதனால் படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

அவரது மரணம் தொடர்பாக காவல் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்தப் பறவை பத்திரமாக கட்டுபாட்டில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை இந்தப் பறவையால் ஆஸ்திரேலியாவில் 150 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் இந்தப் பறவையால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக பறவைகள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இதுபோன்ற கொடிய வகை இனங்களை வளர்ப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Click for more trending news
சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................