மாவோயிஸ்ட் வெடிகுண்டு தாக்குதல்: பதற்றத்தில் சத்தீஸ்கர்!

Encounter with Maoist in Chhattisgarh: இந்த சம்பவத்தால் 1 பாதுகாப்புப் படை வீரருக்குக் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

மாவோயிஸ்ட் வெடிகுண்டு தாக்குதல்: பதற்றத்தில் சத்தீஸ்கர்!

Assembly election in Chhattisgarh: நாளை சத்தீஸ்கரின் தேர்தல் நடக்க உள்ளது.

Raipur:

சத்தீஸ்கர் மாநில சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒரே நாளில் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் அம்மாநிலத்தின் அன்டகார் கிராமத்தில் 7 இடங்களில் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்துள்ளனர் மாவோயிஸ்ட்கள். இதனால், பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்ட்களுக்கும் இடையில் துப்பாக்கிச்சூடு நடந்து வருகிறது.

கன்கர் மாவட்டத்தில் இருக்கும் அன்டகார் மாநிலத்தில் இன்று காலை தாக்குல் சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. பி.எஸ்.எஃப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர்கள், அன்டகார் கிராமத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட போது அவர்கள் தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தால் 1 பாதுகாப்புப் படை வீரருக்குக் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

பிஜப்பூர் பகுதியிலும் இன்று மாவோயிஸ்ட்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் துப்பாக்கிச்சூடு நடந்து வருகிறது.