பிரதமர் மோடி கொஞ்சி விளையாடும் பேபி யார்? - பரபரப்பை ஏற்படுத்திய இன்ஸ்டா ஃபோட்டோ!!

இன்ஸ்டா கிராமில் அதிக ஃபாலோயர்களை கொண்ட அரசியல் தலைவராக மோடி உள்ளார். அவரை 2.50 கோடிக்கும் அதிகமானோர் ஃபாலோ செய்கின்றனர்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
பிரதமர் மோடி கொஞ்சி விளையாடும் பேபி யார்? - பரபரப்பை ஏற்படுத்திய இன்ஸ்டா ஃபோட்டோ!!

மோடி கையில் வைத்திருக்கும் குழந்தை யார் என்பதற்கான விடை கிடைத்துள்ளது.


New Delhi: 

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி கொஞ்சி விளையாடும் குழந்தை யார் என்பதற்கான விடை கிடைத்துள்ளது. இன்று மோடி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் ஒரு குழந்தையுடன் இருக்கும் 2 புகைப்படங்களை வெளியிட்டார். 

அதற்கு 'ஒரு முக்கியமான விருந்தினர் என்னை சந்திக்க நாடாளுமன்றத்திற்கு வந்திருக்கிறார்' என்று மோடி தலைப்பிட்டிருந்தார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து அந்த பேபி யாராக இருக்கும் என்ற கேள்வி பரவலாக எழுந்தது. 
 


ஒரு புகைப்படத்தில் குழந்தையை முழுவதுமாக மோடி மடியில் வைத்திருக்கிறார். மற்றொன்றில் அது மோடி மடியில் உட்கார்ந்து கொண்டு மேஜை மீதிருக்கும் சாக்லேட்டை ஆர்வத்துடன் பார்க்கிறது. இந்த இரு ஃபோட்டோவுமே லைக்குகளை அள்ளிக் குவித்து வருகின்றன.
 


முதலில் நாடாளுமன்ற அலுவல்களைக் காண வந்திருப்பவர்களில் ஒருவருக்கு சொந்தமானதாக இருக்கும் என்று உறுதி செய்யப்பட்டது. பின்னர் விசாரத்ததில் பாஜக எம்.பி. சத்திய நாராயணன் ஜதியாவின் பேரன் என்பது தெரியவந்துள்ளது. 

இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் அதிகம் ஃபாலோ செய்யப்படும் அரசியல் தலைவராக பிரதமர் மோடி உள்ளார். இருப்பினும் அவர் எவரையும் ஃபாலோ செய்யவில்லை. 

இன்ஸ்டாவில் அதிகம் லைக் செய்யப்பட்ட ஃபோட்டோவாக விராட்கோலி - அனுஷ்கா திருமண புகைப்படம் உள்ளது. சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................