தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 21 ஆயிரத்தை தாண்டியது

கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர். இதுவரையில் கொரோனா தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 160 ஆக அதிகரித்திருக்கிறது.

தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 21 ஆயிரத்தை தாண்டியது

சென்னையில் மட்டும் இன்று 616 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 938 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 

சென்னையில் மட்டும் இன்று 616 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு மட்டும் 13,980 பேருக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறது.

இன்று மட்டும் 687 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். மாநிலத்தில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தோரின் எண்ணிக்கை 12 ஆயிரமாக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர். இதுவரையில் கொரோனா தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 160 ஆக அதிகரித்திருக்கிறது.
 
கொரோனா பாதிப்பை கண்டறிவதற்காக தமிழகத்தில் 43 அரசு மற்றும் 29 தனியார் என மொத்தம் 72 ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன. 

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 12,605 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. 

சென்னைக்கு அடுத்தபடியாக அதிகபட்சமாக செங்கல்பட்டில் 94 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 22 பேருக்கும், திருவள்ளூரில் 28 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.