பனியில் விளையாடக் கூடாது என்ற நூற்றாண்டுத் தடையை நீக்கப் போராடிய சிறுவன்

முதல் பனிப்பந்தை தனது சின்னத்தம்பியின் மேல் குறிவைக்கப்போவதாக பத்திரிக்கைகளிடம்  உற்சாகமாக தெரிவித்த சிறுவன்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
பனியில் விளையாடக் கூடாது என்ற நூற்றாண்டுத் தடையை நீக்கப் போராடிய சிறுவன்

முதல் பனிபந்துடன் விளையாடி மகிழ்ந்த சிறுவன்


கோலாராடோவில் உள்ள சேவரன்ஸ் என்னும் சிறிய கிராமத்தில் கடந்த நூற்றாண்டில் போடப்பட்ட பனியில் விளையாடக் கூடாது என்ற தடை இருந்து வந்தது. அந்த தடைக்கு எதிராக முறையாக அனுமதி பெற்று தனது முதல் பனிப்பந்தை எறிந்து ஒன்பது வயது சிறுவன் சாதனை படைத்தான்.


இதற்காக ஊர் அதிகாரிகளிடம் முறையிட முடிவெடுத்த டானே என்னும் அச்சிறுவன், வழக்கமாக பெற்றோர்கள் பயன்படுத்தப்படும் லாஜிக்கையே பயன்படுத்தி வென்றான்.


‘இன்றைய குழந்தைகளுக்கு வெளியே விளையாட அனுமதி கிடைப்பதில்லை, இந்நிலை தொடர்வதால் குழந்தைகளுக்கு (ஏ.டிஹெச்.டி), ஆன்சைடி மற்றும் உளவியல் ரீதியான பிரச்சைனைகள்' வருவதாக போலீசாரிடம் டானே கூறினான்.


மேலும் அங்குள்ள குழந்தைகளுக்கும் உலகத்தில் உள்ள மற்றவர்களைபோல் வீதியை மீறாமல் பனியில் விளையாட வேண்டும் என்ற ஆசை இருக்கும் என்ற கருத்தை முன்வைத்த டானேவின் வாதம் பலரால் எற்கப்பட்ட நிலையில் பனிபந்து எறிவதற்கான தடை சட்டம் நீக்கப்பட்டது.


அதைத்தொடர்ந்து தனது முதல் பனிப்பந்தை வீசி விளையாடிய டானே தான் கண்ணாடி ஜன்னல்களை உடைக்கமாடேன் என்றும் தனது சின்னத்தம்பியையே குறிவைக்கப்போவதாக அங்குள்ள பத்திரிக்கைகளிடம்  உற்சாகமாக தெரிவித்தார்.

Click for more trending news
சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................