கர்நாடகாவை அச்சுறுத்தும் கனமழை! 9 பேர் உயிரிழப்பு!!

பெலகாவி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு மட்டும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
கர்நாடகாவை அச்சுறுத்தும் கனமழை! 9 பேர் உயிரிழப்பு!!

நிவாரண முகாம்களில் 17 ஆயிரம்பேர் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.


Bengaluru: 

கர்நாடகாவை அச்சுறுத்தி வரும் கனமழைக்கு இதுவரைக்கும் 9 பேர் உயிரிழந்துள்ளனர். 43 ஆயிரத்திற்கும்  அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளார்கள். 

முதல்வர் எடியூரப்பா நிவாரண முகாம்களை பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தியுள்ளார். வெள்ளத்தால் நிரம்பிய அணைகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளன. மூழ்க வாய்ப்புள்ள பகுதிகள் மற்றும் கிராமங்களை கண்டறிந்து அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

பெலகாவி மாவட்டம் மழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு மட்டும் 9 பேர் உயிரிழந்துள்ளனர். 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள். நிவாரண முகாம்களில் மட்டும் 17 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

கர்நாடகாவின் வடக்கு பகுதி மாவட்டங்கள், கடற்கரை மற்றும் மல்நாடு பிராந்தியத்தில்தான் அதிக மழை பெய்திருக்கிறது. இங்கு மாநில, தேசிய பேரிடர் மீட்பு படையினர், ராணுவம் மற்றும் விமானப்படையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 

மாவட்ட நிர்வாகம் எப்போதும் மிகுந்த அலெர்ட்டுடன் இருக்க வேண்டும் என்றும், எத்தகைய எமர்ஜென்சியை எதிர்கொள்வதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்றும் கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................