விசாகப்பட்டினத்தில் ராட்சச கிரேன் விழுந்த விபத்து; உயிரிழப்பு 9 ஆக அதிகரிப்பு!!

8 விநாடிகள் கொண்ட வீடியோ ஒன்றில் மஞ்சள் நிற ராட்சச கிரேன் ஒன்று உடைந்து விழுவது படமாக்கப்பட்டுள்ளது.

விசாகப்பட்டினத்தில் ராட்சச கிரேன் விழுந்த விபத்து; உயிரிழப்பு 9 ஆக அதிகரிப்பு!!

விசாகப்பட்டினத்தில் இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

Visakhapatnam:

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் இந்துஸ்தான் கப்பல் கட்டுமான தளத்தில் ராட்சச கிரேன் விழுந்து 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. மேலும் ஒருவர் படுகாயமுற்றுள்ளார்.

அவர்களில் நான்கு பேர் கப்பல் கட்டும் ஊழியர்கள், மீதமுள்ளவர்கள் ஒப்பந்த ஊழியர்கள் என்று விசாகப்பட்டினம் போலீஸ் கமிஷனர் ஆர்.கே மீனா என்.டி.டி.விக்கு அளித் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

8 விநாடிகள் கொண்ட வீடியோ ஒன்றில் மஞ்சள் நிற ராட்சச கிரேன் ஒன்று உடைந்து விழுவது படமாக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் மற்றும் ஆம்புலன்ஸ்கள் விரைந்துள்ளன.