This Article is From Nov 13, 2019

Rain Alert - தமிழகத்தின் 8 மாவட்டங்களுக்கு மழை!

Rain Alert for TN - தமிழகத்தைப் பொறுத்தவரை நாளை மற்றும் நாளை மறுநாள் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது

Rain Alert - தமிழகத்தின் 8 மாவட்டங்களுக்கு மழை!

Rain Alert for TN - "சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறத்தைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும்"

Rain Alert for TN - தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழை (Rain) பெய்யும் என்பது குறித்து வானிலை மையம் (IMD) தகவல் தெரிவித்துள்ளது. 

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச் சலனம் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிம் மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறத்தைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். மழை பெய்ய வாய்ப்பில்லை

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டத்தின் வலிநோக்கம் மற்றும் பள்ளமோர்குளம் ஆகிய இடங்களில் தலா 1 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. 

தமிழகத்தைப் பொறுத்தவரை நாளை மற்றும் நாளை மறுநாள் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது,' என்று கூறப்பட்டுள்ளது. 

.