தமிழகத்தில் புதிதாக 776 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 13,967 ஆக உயர்வு

டிஸ்சார்ஜை பொருத்தளவில் இன்று மட்டும் 400 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தம் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 6,282 ஆக அதிகரித்திருக்கிறது. 

தமிழகத்தில் புதிதாக 776 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 13,967 ஆக உயர்வு

தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனா பாதிப்புக்கு 94 பேர் பலியாகி உள்ளனர்.

தமிழகத்தில் இன்று புதிதாக 776 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்றை அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பேட்டியில் கூறியதாவது-

இன்று மட்டும் மாநிலத்தில் புதிதாக 776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 13,967 ஆக உயர்ந்துள்ளது. 

சென்னையில் மட்டும் 567 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மொத்தம் 8,795 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

மாநில அளவில் இன்று 7 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனா பாதிப்புக்கு 94 பேர் பலியாகி உள்ளனர்.

டிஸ்சார்ஜை பொருத்தளவில் இன்று மட்டும் 400 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தம் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 6,282 ஆக அதிகரித்திருக்கிறது. 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.