73 வயதில் கட்டுமஸ்தாக உடலை மாற்றிய ‘சூப்பர் பெண்’- அவரின் கதையை தெரிஞ்சுக்கோங்க!!

“trainwithjoan” என்னும் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை சுமார் 5 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள்.

73 வயதில் கட்டுமஸ்தாக உடலை மாற்றிய ‘சூப்பர் பெண்’- அவரின் கதையை தெரிஞ்சுக்கோங்க!!

ஜோனுக்கு இப்போது பெரிய ரசிகர் வட்டமே இருக்கிறது. 

கனடாவின் ஒன்டாரியோவைச் சேர்ந்த 73 வயதுப் பெண், தன் வயதின் கட்டுப்பாடுகளையும் தாண்டி கட்டுமஸ்தான உடலைக் கடுமையான உழைப்பினால் கொண்டு வந்துள்ளார். 

ஜோன் மெக்டோனல்டு என்னும் அந்தப் பெண், கடந்த காலங்களில் உடல் பருமனால் அவதிப்பட்டுள்ளார். அதனால் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருந்துகளை உட்கொண்டு வந்துள்ளார். 

5 அடி 3 இன்ச் உயரம் கொண்ட ஜோன், முன்னர் 198 பவுண்டு எடையிலிருந்தார். ஆனால், தற்போது அவர் 50 பவுண்டுகளை குறைத்துப் பலருக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார். ஜிம்மிற்கு சென்று தொடர்ந்து உடற்பயிற்சி செய்ததனால் இந்த மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார் ஜோன். 

“trainwithjoan” என்னும் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை சுமார் 5 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள். ஜோனுக்கு இப்போது பெரிய ரசிகர் வட்டமே இருக்கிறது. 

Newsbeep

தனது இந்த மாற்றத்துக்கு ஜிம்மிற்கு செல்வது, முறையான உணவு உட்கொள்ளும் முறை மற்றும் சப்ளிமென்டுகள் எடுத்துக் கொள்வதுதான் காரணம் என்று நியூயார்க் போஸ்டிடம் சொல்கிறார் ஜோன்.

Click for more trending news