புத்த கோயிலில் எலும்பும் தோலுமாக யானை : விசாரணைக்கு உத்தரவிட்ட வனவிலங்கு அமைச்சகம்

எலும்பும், தோலுமாக உள்ள டிக்கிரியின் நிலை மிகவும் மோசமாக உள்ளது, ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மக்களின் கூச்சல், புகை, பட்டாசு போன்றவற்றுக்கு நடுவே அதை அழைத்துச் செல்கின்றனர்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
புத்த கோயிலில் எலும்பும் தோலுமாக யானை : விசாரணைக்கு உத்தரவிட்ட வனவிலங்கு அமைச்சகம்

இந்த பதிவுக்கு பின்னர் அந்த யானையை திருவிழாவை விட்டு விலக்கிக் கொண்டனர்


Colombo: 

இலங்கையில் புத்த ‘பற்கள்' கோவிலில் ஆண்டு தோறும் ஈசாலா பெரஹேரா என்ற திருவிழா கொண்டாடப்படும். பத்து நாள்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் 50 மேற்பட்ட யானைகள் கலந்து கொள்ளும். திருவிழாவில் 70 வயதான டிக்கிரி என்ற பெண் யானையும் ஒன்று . எலும்பும் தோலுமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த யானை ஊர்வலத்தில் பங்கேற்க நிர்பந்திக்கப்பட்டது குறித்து சுற்றுலா மற்றும் வனவிலங்கு அமைச்சர் ஜான் அமரதுங்கா  விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.  

டிக்கிரி பற்றிக் குறிப்பிட்டுள்ள சேவ் எலிபேண்ட் (Save Elephant ) அறக்கட்டளை, “ டிக்கிரிக்கு உடல் நிலை சரியில்லை. திருவிழாவில் பங்கேற்கும் யானைகளில் இதுவும் ஒன்று. திருவிழா தொடங்கும் போது அதாவது மாலை நேரத்தில் பேரணியில் இணையும் டிக்கிரி நள்ளிரவில்தான் மீண்டும் தன் இடத்துக்குத் திரும்புகிறது. எலும்பும், தோலுமாக உள்ள டிக்கிரியின் நிலை மிகவும் மோசமாக உள்ளது, ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மக்களின் கூச்சல், புகை, பட்டாசு போன்றவற்றுக்கு நடுவே அதை அழைத்துச் செல்கின்றனர்.

டிக்கிரி தினமும் பல கிலோமீட்டர்களுக்கு நடந்து அழைத்துச் செல்லப்படுகிறது. அப்படிச் செல்லும் வழிகளில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஆசீர்வாதம் செய்யவும் கட்டளையிடுகின்றனர். அவளின் உடல் முழுவதும் பட்டாடைகளால் மூடி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அதனால் யானையின் எலும்பு உடம்பு மக்களுக்குத் தெரிவதில்லை. அதிக வெளிச்சத்தினால் அவளின் கண்களில் வரும் கண்ணீரையும் யாரும் கவனிப்பதில்லை. என்று குறிப்பிட்டிருந்தது. 

இந்த பதிவுக்கு பின்னர் அந்த யானையை திருவிழாவை விட்டு விலக்கிக் கொண்டனர். சமூக வலை தளங்களிலும் யானைக்கு ஆதரவு தெரிவித்தும் கோயில் நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர். சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................