சிவப்பு விளக்கு பகுதியிலிருந்து 7 வயது சிறுமி மீட்பு! தாய் அளித்த புகாரில் நடவடிக்கை!!

சிறுமியின் தாயார் டெல்லி மகளிர் ஆணையத்தில் புகார் அளித்திருக்கிறார். இதன்பேரில் நடவடிக்கை எடுத்த போலீசார் சிறுமியை மீட்டு குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
சிவப்பு விளக்கு பகுதியிலிருந்து 7 வயது சிறுமி மீட்பு! தாய் அளித்த புகாரில் நடவடிக்கை!!

சிறுமியை வைத்திருந்த பாலியல் தொழில் நடத்திவந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


New Delhi: 

டெல்லியில் சிவப்பு விளக்கு பகுதியான ஜி.பி. ரோட்டில் 7 வயது சிறுமி ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். அவரது தாயார் அளித்த புகாரின்பேரின் டெல்லி மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

அசாமை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் 7 வயது மகளுடன் டெல்லிக்கு வேலை தேடி வந்துள்ளார். அவருக்கு தீபக் என்பவர் வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளார். இதுதொடர்பாக அசாம் பெண்ணிடம் ஆவணங்கள் மற்றும் ஒப்பந்தத்தில் கையெழுத்தினை தீபக் பெற்றுள்ளார்.

இதையடுத்து, பாலியல் தொழில் நடத்தி வரும் மகிமா என்பவரிடம் தீபக் அழைத்துச் சென்றுள்ளார். ஓட்டலில் வேலை வாங்கித் தருவதாக தீபக்கும் மகிமாவும் அந்தப் பெண்ணிடம் உறுதி அளித்துள்ளனர். அவரது 7 வயது மகளை பள்ளியில் சேர்த்து விடுவதாகவும், சிறுமி பள்ளி விடுதியில் தங்குவார் என்றும் கூறியுள்ளனர். 

ஆனால் ஓட்டலில் வேலை வாங்கித் தராமல் பாலியல் தொழிலில் ஈடுபட வேண்டும் என்று அசாம் பெண்ணை தீபக்கும், மகிமாவும் வற்புறுத்தியுள்ளார். அதே நேரத்தில் 7 வயது குழந்தையும் சிவப்பு விளக்கு பகுதியான ஜி.பி. ரோட்டிற்கு கொண்டு வரப்பட்டது. 

பாலியல் தொழிலில் ஈடுபடாவிட்டால், குழந்தையை கொன்று விடுவோம் என்று தீபக்கும், மகிமாவும் மிரட்டியுள்ளனர். இதற்கு பயந்த அசாம் பெண், பாலியல் தொழிலில் சில நாட்கள் ஈடுபட்டார். 

பின்னர் தனது கணவரின் உதவியோடு அசாம் பெண் சிவப்பு விளக்கு பகுதியிலிருந்து தப்பி வந்தார். இதன்பின்னர் டெல்லி மகளிர் ஆணையத்தில் மகிமா மற்றும் தீபக்கு மீது புகார்கள் அளிக்கப்பட்டது. இதன்பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்து 7 வயது சிறுமியை மீட்டனர். குழந்தையை கொன்று விடுவதாக மிரட்டி, அதனை கடத்தி வைத்திருந்த மகிமாவை போலீசார் கைது செய்துள்ளனர். 


 சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................