This Article is From Jun 26, 2019

பாசிசத்தின் 7 அறிகுறிகளும் இந்தியாவில் உள்ளன : என்.டி.ஏவை கிழித்து தொங்க விட்ட மஹுவா மொய்த்ரா

“அமைச்சர்கள் கல்லூரியில் பட்டம் பெற்றதை காட்ட முடியாத போது ஏழை மக்கள் இந்த நாட்டைச் சார்ந்தவர்கள் தான் என்பதற்கான சரியான சான்றிதழை காட்ட வேண்டுமென வற்புறுத்துவது ஏன்..? "

ஆழமற்ற மேலோட்டமான தேசியவாதம் என்பது இனவெறியையும் குறுகிய தன்மையும் கொண்டது

New Delhi:

திரிணாமுல் காங்கிரஸின் புதிய சட்டமன்ற உறுப்பினரான மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் தனது முதல் உரையினால் ட்விட்டரில் ட்ரெண்டாகியுள்ளார். அமெரிக்காவில் ஹோலோகாஸ்ட் நினைவு அருங்காட்சியகத்தில் பாசிசத்தின் குறியீடுகள் குறித்த போஸ்டர் உள்ளது. அதில் சொல்லப்பட்ட அனைத்து அறிகுறிகளும் இந்தியாவில் காணப்படுகிறது என்று எச்சரித்துள்ளார். 

வரலாற்றின் எந்த பக்கத்தில் இருக்க விரும்புகிறோம் என்பது நாம் தீர்மானிக்க வேண்டும். அரசியலமைப்பை ஆதாரிக்கும் பக்கமா... அல்லது அதை சவக்குழிக்குள் இருக்கும் பக்கமா என்பதை நாம் தான் முடிவு செய்யவேண்டும் என்று மேற்கு வங்கத்தின் கிருஷ்ணாநகரைச் சேர்ந்த 42 வயது நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார். அமெரிக்காவின் முன்னாள் முதலீட்டு வங்கியாளரான திருமதி மொய்த்ரா, பாஜாகவின் ஆணையை தாழ்மையுடன் ஏற்றுக் கொண்டாலும் அதன் மறுபக்க அதிருப்தியின் குரல்களைக் கேட்க வேண்டியது அவசியம் என்று கூறினார். 

இங்கு அச்சா தீன் என்று சொல்வீர்கள். அரசாங்கம் கட்டியெழுப்ப விரும்பும் இந்திய பேரரசின் மீது சூரியன் ஒருபோதும் அஸ்தமிக்காது என்று கூறலாம். ஆனால், நீங்கள் சில அறிகுறிகளைக் காணவில்லை. நீங்கள் கண்களைத் திறந்தால் மட்டுமே அறிகுறிகள் இருப்பதை காண்பீர்கள் இந்த நாடு எல்லா இடங்களிலும் சிதைந்து போயுள்ளது

அறிகுறிகளின் பட்டியலானது ‘மேலோட்டமான தேசிய வாதத்தில் மூழ்கி மனித உரிமைகளை அவமதித்தல், கருத்து வேறுபாடுகளை ஒடுக்குதல், வெகுஜன ஊடகங்களின் கட்டுப்பாடு, தேசிய பாதுகாப்பு மீதான ஆவேசம் மற்றும் மதம் ஆகியவை அடங்கும். 

ஆழமற்ற மேலோட்டமான தேசியவாதம் என்பது இனவெறியையும் குறுகிய தன்மையும் கொண்டது. காமம் ஒன்றுபடுவதற்கான விருப்பம் அல்ல. அஸ்ஸாமில் அரசாங்கத்தில் புதிய குடிமக்கள் பதிவேட்டை எடுத்துக் கொண்டார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஸ்மிருதி இரானி ஆகியோரைப் பற்றி பேசினார். “அமைச்சர்கள் கல்லூரியில் பட்டம் பெற்றதை காட்ட முடியாத போது ஏழை மக்கள் இந்த நாட்டைச் சார்ந்தவர்கள் தான் என்பதற்கான சரியான சான்றிதழை காட்ட வேண்டுமென வற்புறுத்துவது ஏன்..? என்று கேள்வி எழுப்பினார். 

ஒவ்வொரு முறையும் என்,டி,ஏ நாடாளுமன்ற உறுப்பினர்கள் சத்தமாக கத்தி தங்களின் எதிர்ப்ப காட்டும் போது, “சார் இந்த அறையில் தொழில் முறை ஹேக்கர்களுக்கு இடமில்லை. சபையை ஒழுங்காக நடத்துங்கள்” என்று கேட்டுக் கொண்டார்.

 வெறுப்பு அரசியலினால் பெருகி வரும் கும்பல் அரசியல் குறித்தும் கடந்த வாரம் ஜார்கண்டில் நடந்த கொலை குறித்தும் பேசினார்.

2014 முதல் 2019 வரை வெறுப்பு அரசியலின் கும்பல் நடத்தும் குற்றங்கள் 10 மடங்கு அதிகரித்துள்ளது. என்று தெரிவித்தார். நாட்டின் பன்முகத்தன்மையைப் பற்றி மவுலானா ஆசாத்தின் வார்த்தைகளை மேற்கோள் காட்டினார். இந்த நாட்களில் விசுவாசத்தை வெளிப்படுத்த கோஷங்களும் முழக்கங்களும் தேவைப்படுகின்றன. ஆனால் எந்தவொரு இந்தியரும் தேசபக்தர் என்பதை வெளிக்காட்ட ஒரு முழக்கம் கூட இல்லை என்று கூறினார்.

ஊடங்கள் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு அடிபணிய வைத்துள்ளனர் என்றும் தெரிவித்தார். ஊடகங்கள் இந்த நாட்டில் ஒரு மனிதனுக்காக மறைமுகமாக கட்டுப்படுத்தப்படுகின்ற அல்லது மறைமுகமாக அவருக்கு கடன்பட்டுள்ளன என்று கூறினார். 

.