This Article is From Apr 25, 2019

குழந்தைகளை கடத்தி விற்கும் கும்பல் ஆந்திரபிரதேசத்தில் கைது

முக்கிய குற்றவாளியான வி.கங்காதர் ரெட்டி மற்றும்  4 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். ஹைதராபாத் போலீஸ் சிறப்பு குழுவினர் குழந்தைகளை கடத்தும் கும்பலை கைது செய்துள்ளனர்.

குழந்தைகளை கடத்தி விற்கும் கும்பல் ஆந்திரபிரதேசத்தில் கைது

பிறந்து 1மாதமே ஆன குழந்தை உட்பட 3 குழந்தைகள் மீட்கப்பட்டனர் (Representational)

Hyderabad:

ஆந்திராவில் குழந்தைகளை கடத்தும் 7 பேர் கொண்ட கும்பல் கைது. பிறந்து 1மாதமே ஆன குழந்தை உட்பட 3 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். 

முக்கிய குற்றவாளியான வி.கங்காதர் ரெட்டி மற்றும்  4 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். ஹைதராபாத் போலீஸ் சிறப்பு குழுவினர் குழந்தைகளை கடத்தும் கும்பலை கைது செய்துள்ளனர்.

ஒரு பெண் குழந்தை  மற்றும் இரண்டு வயதுடைய 2 ஆண் குழந்தைகள்  மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 

ஹைதராபாத் மற்றும் குண்டூர் ஆகிய பகுதிகளிலிருந்து 3 குழந்தைகளை மார்ச் 2018 அக்டோபர் மாதம் கடத்தியுள்ளார். ரூ. 2.5 லட்சம் முதல் ரூ. 3.10 லட்சம் வரை குழந்தைகள் விற்கப்பட்டுள்ளனர். 

குழந்தைகளற்ற தம்பதிகளுக்கு குழந்தைகளை விற்றதாக இன்ஸ்பெக்டர் ஜி.கோட்டீஸ்வர் ராவ் கூறினார். 

மீட்கப்பட்ட குழந்தைகளை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று தெரிவித்தனர்.

.