'பாஜக'வின் ஓராண்டு நன்கொடை சுமார் 500 கோடி!

முந்தைய ஆண்டு நன்கொடை வருவாய் பாஜக-வுக்கு 76.85 கோடி ரூபாயிலிருந்து 532.27 கோடி ரூபாய் ஆக உயர்ந்துள்ளது

'பாஜக'வின் ஓராண்டு நன்கொடை சுமார் 500 கோடி!

Donations to BJP increased from Rs 76.85 crore during 2015-16 to Rs 532.27 crore in 2016-17.

ஹைலைட்ஸ்

  • தேசிய கட்சிக்களுக்கு கிடைத்த நன்கொடை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது
  • அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிட்ட ஜனநாயக சீர்திருத்த மையம்
  • பாஜக-வுக்கு மட்டும் 500 கோடிக்கு மேல் நன்கொடை
New Delhi:

கடந்த 2016-17-ம் ஆண்டில் ஒவ்வொரு தேசிய கட்சிக்கும் அறியப்படாத ஆதாயங்கள் மூலம் கிடைத்த நன்கொடை வருவாய்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தேசிய கட்சிகளுக்குக் கிடைத்த நன்கொடை மட்டும் 710.80 கோடி ரூபாயாம். இதில் பாஜக-வுக்கு மட்டும் சுமார் 532.27 கோடி ரூபாய் நன்கொடையாக கிடைத்திருக்கிறது. சரியாக 1,194 பேரிடமிருந்து பாஜக-வுக்கு இந்த நன்கொடை கிடைத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திரிணாமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள்  தங்களுக்குக் கிடைத்ததாக அறிவித்த நன்கொடையைவிட ஒன்பது மடங்கு அதிகமாக பாஜக-வுக்கு நன்கொடை கிடைக்கப்பெற்றுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை ஜனநாயக சீர்திருத்த மையம் அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கை 2016-17 ஆம் ஆண்டுக்கானது. இதே காலகட்டத்தில் 20ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக எந்த நன்கொடையும் தங்களுக்கு வரவில்லை என பகுஜன் சமாஜ் கட்சி அறிவித்துள்ளது. மொத்தமாக தேசிய கட்சிகளுக்கு 2,123 பேரிடம் இருந்து சரியாக 589.38 கோடி ரூபாய் நன்கொடையாகக் கிடைத்துள்ளது. இதில், 1,194 பேரிடமிருந்து பாஜக-வுக்கு மட்டும் 532.27 கோடி ரூபாய் கிடைக்கப்பெற்றுள்ளது. இதுபோக, காங்கிரஸ் கட்சிக்கு 599 பேரிடமிருந்து சரியாக 41.90 கோடி ரூபாய் நன்கொடையாக வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் கடந்த ஆண்டைவிட, 2016-17 ஆண்டு காலகட்டத்தில் இந்த அரசியல் கட்சிகளுக்குக் கிடைத்த நன்கொடை ரூபாய் 102.02 கோடி ரூபாயிலிருந்து 487.36 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேசிய தேர்தல் கண்காணிப்பகம் மற்றும் ஜனநாயக சீர்திருத்த மையம் ஆகியவை வெளியிட்டுள்ளன.

முந்தைய ஆண்டு நன்கொடை வருவாய் பாஜக-வுக்கு 76.85 கோடி ரூபாயிலிருந்து 532.27 கோடி ரூபாய் ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் காங்கிரஸ் கட்சிக்கு 71 லட்சத்தில் இருந்து 6.34 கோடியாக உயர்ந்துள்ளது.

மேலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நன்கொடை வருவாய் 231 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வருவாயும் முந்தைய ஆண்டு வருவாயைக் காட்டிலும் 2016-17 ஆண்டில் 190 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் வருவாய் 9 சதவிகிதம் வீழ்ந்துள்ளதாக அக்கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.