பாகிஸ்தானில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு! - 17 பேர் பலி, 30 பேர் காயம்!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவாவின் மாகாணத்தில் நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 17 பேர் உயிரிழந்ததாகவும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளனர்

 Share
EMAIL
PRINT
COMMENTS
பாகிஸ்தானில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு! - 17 பேர் பலி, 30 பேர் காயம்!

பாகிஸ்தானின் அரோக்கலை மாவட்டத்தில் உள்ள வெள்ளிக்கிழமை சந்தையில் இந்த சக்திவாய்ந்த வெடிகுண்டு சம்பவம் நிகழ்ந்துள்ளது

Peshawar: 

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவாவின் மாகாணத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் நிகழ்ந்த சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பில் 17 பேர் உயிரிழந்ததாகவும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, இன்று காலை பாகிஸ்தானின் கராச்சி நகரில், சீன தூதரகம் அருகே குண்டுவெடித்தது. அந்த பகுதியில் துப்பாக்கிச்சூடும் நடந்தது. இந்த சம்பவத்தில் 2 போலீசார் உயிரிழந்துள்ளனர். ராணுவத்தினர் திருப்பி சுட்டதில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், அந்த சம்பவத்தை தொடர்ந்து, பாகிஸ்தானின் அரோக்கலை பழங்குடியினர் மாவட்டத்தில் உள்ள வெள்ளிக்கிழமை சந்தையில் இந்த சக்திவாய்ந்த வெடிகுண்டு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................