This Article is From Aug 23, 2019

19 ஆண்டுகளாக பொதுக் கழிப்பறையில் வசிக்கும் மூதாட்டி! மதுரையில் அவலம்!

பொதுக் கழிப்பறையை சுத்தம் செய்வதன் மூலம் தினமும் அவருக்கு ரூ.70 முதல் 80 வரை கிடைக்கிறது.

19 ஆண்டுகளாக பொதுக் கழிப்பறையில் வசிக்கும் மூதாட்டி! மதுரையில் அவலம்!

கிட்டதட்ட 20 ஆண்டுகளாக பொதுக் கழிப்பறையில் வசித்து வந்துள்ளார் கருப்பாயி என்ற மூதாட்டி

மதுரையில் உள்ள பொதுக் கழிப்பறை ஒன்றில் கிட்டதட்ட 20 ஆண்டுகளாக 65 வயது மூதாட்டி ஒருவர் வாழ்க்கை நடத்தி வருகிறார். 

இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் படி, மதுரை ராம்நாடு பகுதியில் உள்ள பொதுக் கழிப்பறை ஒன்றில், 19 வருடங்களாக கருப்பாயி என்ற அந்த மூதாட்டி வாழ்க்கை நடத்தி வருகிறார். அந்த பொதுக் கழிப்பறையை சுத்தம் செய்வதன் மூலம் தினமும் ரூ.70 முதல் 80 வரை அவருக்கு கிடைப்பதாக தெரிகிறது. 

மூதாட்டி கருப்பாயி கூறும்போது, முதியோர் உதவித் தொகைக்காக பதிவு செய்துள்ளேன், எனினும் இதுவரை எந்த உதவியும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பல அதிகாரிகளிடம் முறையிட்டுவிட்டேன், எதுவும் பயனளிக்கவில்லை. 

வேறு எந்த வருமான ஆதாரமும் இல்லாத காரணத்தினால், இப்படி ஒரு அசாதாரண வாழ்க்கை முறைக்கு தள்ளப்பட்டேன். இந்த பொதுக் கழிப்படத்தை சுத்தம் செய்வதன் மூலம் எனக்கும் தினமும், ரூ.70-80 வரை வருமானம் கிடைக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு ஒரு மகள் மட்டும் இருப்பதாகவும் அவரும் கருப்பாயியை கைவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். 
 


மூதாட்டி கருப்பாயி வசிப்பிடம் குறித்த புகைப்படங்களும், அவரது அவலமான வாழ்க்கை கதையும் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டதை தொடர்ந்து, அவருக்கு உதவி செய்ய பலர் முன்வந்துள்ளனர். 

 


மேலும், ஒரு சிலர் ட்வீட்டரில் மூதாட்டி கருப்பாயின் புகைப்படங்களை பதிவிட்டு அரசு அலுவலங்களை டேக் செய்து அவருக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கும்படி வலியுறுத்தியுள்ளனர். 
 

.