சத்தீஸ்கர் தேர்தலுக்கு மாவோயிஸ்ட் அச்சுறுத்தல்: 65,000 பாதுகாப்பு வீரர்கள் குவிப்பு!

மாவோயிஸ்ட் அச்சுறுத்தல் அதிகம் இருக்கும் சத்தீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்ட சட்டசபைத் தேர்தல் வரும் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது

சத்தீஸ்கர் தேர்தலுக்கு மாவோயிஸ்ட் அச்சுறுத்தல்: 65,000 பாதுகாப்பு வீரர்கள் குவிப்பு!

சத்தீஸ்கரில் வரும் 12 ஆம் தேதி 90 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது

New Delhi:

மாவோயிஸ்ட் அச்சுறுத்தல் அதிகம் இருக்கும் சத்தீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்ட சட்டசபைத் தேர்தல் வரும் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலை பாதுகாப்பான முறையில் நடத்த வேண்டும் என்னும் நோக்கில் 65,000 பாதுகாப்புப் படை வீரர்கள் சத்தீஸ்கருக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

சத்தீஸ்கரில் தண்டேவாடா பகுதியில் தேர்தல் பணிகள் நடந்து கொண்டிருந்ததை செய்தியாக பதிவு செய்ய தூர்தர்ஷனைச் சேர்ந்த குழு சில நாட்களுக்கு முன்னர் சென்றிருந்தது. அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர் மாவோயிஸ்ட்கள். இதனால் தூர்தர்ஷன் கேமரா மேன் மற்றும் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கு மாவோயிஸ்ட் தரப்பு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதற்காகவே, 65,000 பாதுகாப்புப் படை வீரர்களை வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பாதுகாப்புப் படையினர் வருவது குறித்து மூத்த அதிகாரி ஒருவர், ‘சத்தீஸ்கர் போலீஸைத் தவிர்த்து, 650 கம்பெனி பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புக்காக அமர்த்தப்படுவார்கள். சத்தீஸ்கரில் நடக்கவுள்ள முதற்கட்ட தேர்தலுக்கு மட்டுமே இந்த பாதுகாப்பு நடவடிக்கை. இரண்டாம் கட்டத்துக்கு இனிமேல் தான் முடிவு செய்யப்படும்.

முதற்கட்டத் தேர்தலில் 18 தொகுதிகளுக்கு அதிக அச்சுறுத்தல் நிலவி வருகிறது. அந்தத் தொகுதிகளில் அதிக பாதுகாப்புப் படையினர் மிகவும் உஷார் நிலையில் இருப்பார்கள். சென்ற முறையை விட இம்முறை அதிக வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதனால், அதிக பேர் பாதுகாப்புக்குத் தேவைப்படுகின்றனர்' என்று தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கரில் வரும் 12 ஆம் தேதி 90 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து 20 ஆம் தேதி 72 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக தேர்தல் நடைபெறும். டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி, பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.